பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மர இனப் பட்டுள்ளது. விண்டு = திருமால்; தழை = இலை; திருமால் பள்ளி கொண்ட இலை விண்டு தழையாம். மால் துயில் என்றால், திருமால் துயிலும் இலை மரம். சம்புச் சயனம் = திருமால் (சம்பு) சயனம் (உறக்கம்) கொள்ளும் இலைமர49. இப்பெயர்கள் சாம்பசிவம் பிள்ளையின் அகர முதலியில் உள்ளன. பால் துயில் பஞ்சனை என்பதில் உள்ள பால் என்பது, கண்ணனாகிய பாலகனைக் குறிப்பதாயிருக்க வேண்டும். அல்லது மால் என்பது பிழையாகப் பால் என எழுதப்பட்டிருக்க வேண்டும். பஞ்சனை என்பது படுக்கை. 5.4 பமப் பிரியம்: 'யமப் பிரியம்’ என்னும் பெயர் ஆலுக்கு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பது சிக்கலாயுள்ளது. திருவிளை யாடற் புராணத்திலிருந்து ஒரு கதை நினைவுக்கு வருகிறது. முன்னொரு காலத்தில், ஒர் அந்தணன் தன் மனைவி யுடன் திருப்புத் துாரிலிருந்து மதுரைக்குச் சென்றுகொண் டிருந்தான் வழியில் நீர் வேட்கையுற்ற தன் மனைவியை ஒர் ஆலமரத்தின் கீழே படுக்கச் செய்து தான் நீர் கொணரச் சென்றான். விதிப்படி அப்பெண்ணுக்கு வாழ்நாள் முடிந்து விட்டது. யமன் ஆணைப்படி யமதூதர் இருவர் வந்து: உடல் நலத்துடன் உள்ள அப்பெண்ணைக் கொல்வது எவ்வாறு எனத் திகைத்தனர். அப்போது, ஆலமரத்தின் மேலே தற்செயலாகத் தொற்றிக் கொண்டிருந்த ஒர் அம்பைக் கண்டனர். உடனே யம தூதர்கள் காற்று: உண்டாக்கி அம்பை அசையச் செய்து கீழ்நோக்கி; அப்பெண்ணின் மேல் வீழ்ந்து தைக்கச் செய்து உயிரைப் பறித்துச் சென்றனர். இக்கதையின்படி, யமனது கடமை நிறைவேற ஆலமரம் உகந்ததாயிருந்ததால், அதற்கு யமப் பிரியம் என்ற பெயர் 67 பெயர்வைப்புக் கலை வழங்கப்பட்டிருக்கலாம் என உயர்த்துணர இடமுள்ளது. இது முடிந்த முடிபு அன்று. - 5-5 கந்தகச் சத்துரு: ஆலுக்குக் கந்தகச் சத்துரு" என்னும் ஒரு பெயர் சாம்பசிவம் பிள்ளையின் அகர முதலியில் உள்ளது. மற்ற பெயர்கட்குக் காரணம்அறிவிக்காத ஆசிரியர் இப்பெயர்க்கு மட்டும் ஒரு சிறு காரண விளக்கம் தந்துள்ளார். அகர முதலிப் பகுதி வருமாறு: ‘ “ 354$ 533 34$g5/G5, =2,6v , the banyan tree Ficus Bengalensis. It is supposed to kill the effects of Sulphur”. The banyan tree என்பது ஆவின் ஆங்கிலப் பெயர்; அடுத்தது மர நூற்பெயர். கந்தகப் பயன் விளைவை ஆல் அழிக்கும் எனக் கருதப்படுவதாக ஆசிரியர் தெரிவித் துள்ளார். ஆனால், ஆலின் எந்த உறுப்பு அவ்வாறு செய்யும் எனக் குறிப்பிடப் படவில்லை. ஒருவேளை ஆலம் பால் அவ்வாறு செய்யுமோ இஃது அறிந்தார் வாய்க் கேட்டுணர வேண்டியது. 6. வடிவால் பெற்ற பெயர்கள்: வடிவ அமைப்பால் ஆலுக்குப் பல்வேறு பெயர்ன் உள்ளன. 6.1 மறி : - மறி என்னும் தமிழ்ப் பெயரை ஆசிரிய தன்த்

يَتَ٦.نقل 'د ٠ 'நியக் குரோதம்’ என்னும் வடமொழிப் രluജ് இ: மணி நிகண்டும் ஆலுக்கு உரியனவாக அறிவிக்கல்