பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மர இனப் என்பது பாடல் கருத்து. யோசனை என்பதற்கு நாலடியாரில் ஒரு நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது. முரசின் முழக்கம் காதத் தொலைவுக்குக் கேட்டும்; இடியின் முழக்கம் யோசனை தொலைவுக்குக் கேட்டும்; சான்றோர் கொடுத் தார்கள் என்னும் புகழ்ச் சொல் மூன்று உலகத்திற்கும் கேட்கும்-என நாலடியார் நவில்கிறது. 'கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல் (:ee என்பது ւու-*. காதம் என்பதற்கு, கூப்பிடு தூரம் எனவும். புத்துக்கல் (மைல்) தொலைவு எனவும் பலவாறு பொருள் ո ոճ՝ குழப்புகின்றன. குறுந்தடியால் -- - 姆》 அகரமுதவிகள் ہوتی ہے۔ வன்மையுடன் அடிக்கும் முரசொலி கேட்கும் தொலைவு காதம் என் நாலடியார் கூறுகிறது. மற்றும். இடி முழக்கம் கேட்கிற தொலைவு யோசனை எனவும் தெரிவிக்கிறது. இஃது ஒரு வகை அளவை. எப்படியோ! யோசனை அளாவி என்பதற்கு, மிகவும் ஆழ்ந்து அகன்று-பரந்து விரிந்து-ஒங்கி உயர்ந்த மரம் என்று பொருள் கொள்ளலாம். இஃது ஒர் உயர்வு நவிற்சியாகவும் இருக்கலாமே! 8-12 பாழ்: ஆலுக்குப் பாழ் என்ற பெயரும் உண்டு. பாழ் 7త பதற்கு, நாசம். நட்டம், கெடுதி, இழிவு, வீண், அந்தக் கேடு, வெறுமை. இன்மை ஒன்றும் அற்ற இடம், விளையர் நிலம், தரிசு நிலம், குற்றம், ஆகாயம். மூலப் பிரகிருஇ புருடன் (The Sout) என்னும் பதினைந்து பொருள்சத் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழப்பேரகராதியில் தரச் பெயர்வைப்புக் கலை 73 பட்டுள்ளன. இத்தகைய பொருள்க்ளுடன், இலக்கினத் திற்கு எட்டாம் இடம் என்னும் பொருள்ையும் ஜ அபிவி தமிழ்ப்பேரகராதி தந்துள்ளது. சோதிடத்தில் இல்க்கினத் திற்கு எட்டாம் இடம் என்பது அழிவைப் பற்றிய பகுதி யாகும். அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்தில் சன்ரி: என்பது க்ன்ரிப் பழமொழி. அஷ்டமம் என்றால் எட்டாம் இடமாகும். ஆனால், இவ் வகராதிகள் ஆல்மர்ம் என்த பொருளைத் தரவேயில்லை. ஆனால் சாம்பசிவம் பிள்ளை தம் அகரமுதலியில் பாழ் என்பதற்கு ஆலமரம் என்னும் பொருளும் தந்துள்ளார். - அகர முதலிகளில் உள்ள பொருள்களுள், ஆகாயம், மூலப் பிரகிருதி, புருடன் என்பன் தவிர, மற்றன. கெட்ட பொருளனவாம். இந்த நிலையில், ஆலமரத்திற்குப் பாழ் என்னும் பெயர் தந்திருப்பதன் பொருத்தத்தை எவ்வாறு விளக்குவது? - - வானோங்கியிருப்பத்ால் (ஆகாயம்) விண் என்னும் பொருளின் அடிப்படையில் பாழ் என்னும். பெயர் தரப் பட்டதா? அல்லது, மிகவும் பரந்து விரிந்த இடம் ஒன்றும் விளையாமல் பாழாய்க் கிடக்கிறது (விளையா நிலம்) என்ற அடிப்படையில் இப்பெயர் ஏற்பட்டதா? கீழே ஒன்றும் விளையா விடினும் நிழல் தருவதால், பாழான-விளையாத நிலம் என்ற பொருள் செய்யவேண்டா. வானோங்கி, யோசனை அள்ாவி என்னும் பெயர்களின் அடிப்படையிலேயே இங்கே பொருள் செய்தல் நலம். இதற்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்பாடல் பகுதிகள் மூன்று நமக்குத் துணை செய்கின்றன. அவை வருமாறு. " உம்பர் அங்தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ!' f 10-10-4)