பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மர இனப் பனியர் என்னும் இந்து வணிகர் சிலர் கோயில் கட்டி வழி பட்டதனால் அம்மரத்திற்குப் பனியன் என்னும் பெயர் ஏற்பட்டதாக ஒரு செய்தி கூறப்படுகிறது. 8. பெயர்களும் நூல்களும் இனி, ஆலுக்கு உரிய எவ்வெப் பெயர் எவ்வெந்நூலில் கூறப்பட்டுள்ளது என்பதைக் காணலாம். முதுமரம் என்னும் பெயர் சங்க இலக்கியத்திலும், மால் துயில் மரம் என்பது சித்த வைத்திய அகர முதலியிலும், வட விருக்கம் என்பது மூலிகை வைத்திய அகர முதலியிலும், பூத விருக்கம் என்பது சங்கத்து அகர முதலியிலும், யமப் பிரியம் - சம்புச் சயனம் என்பன ஜூபிலி தமிழ்ப் பேரகராதியிலும், பகுபதம், பாலி, சிவம் என்பன தமிழ்க் கலைக் களஞ்சியத்திலும், கான்மரம்-காமரம்-நியக்குரோதம் -மறி - கோளி-வடமரம், தொன்மரம்-பூதவம்-வானோங்கி - ஆல் - ஆலம் - கல்லால் - கல்லாலம் - பூதம் - என்பன பல்வேறு நிகண்டுகளிலும், கந்தகச் சத்துரு - பாரம்பரம் - பாவின் பஞ்சனை, - பாழ் - பேரால் - பெருவால் - மகா சாயம் - மால்துயில் - வரையால் - வடம்புலி - விழுதிகா - விழுதுடந்தி, விழுதுமரம் - யோசனை அளவி - பல சிருங்கி - என்பன சாம்பசிவம் பிள்ளையின் அகர முதலியிலும் இடம் பெற்றுள்ளன. 9. வாழ்த்து மரம் ஆலுக்கு வாழ்த்து மரம்' என் ஒரு பெயர் நாம் புதிதாக வழங்கலாம். பெரியோர்கள் மற்றவரை வாழ்த்து வதற்கு, புளிய மரம்போல் வாழ்க - பூவரச மரம்போல் வாழ்க’ என வேறு பல மரங்களைப் பயன்படுத்தாமல், ஆலமரத்துடன் இணைத்து வாழ்த்துவது ஒரு மரபு. அவ்வாழ்த்து மொழி வருமாறு: பெயர்வைப்புக் &☾ ❍) 79 " ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழியவே' - (புகழேந்திப் புலவரின் அம்மானைப் பாட்டு) ஆல மரம்போல் தழைக்கவேண்டும். என்றைக்குமே அழிக்க முடியாத அறுகுபோல் வேர் ஊன்றவேண்டும். பூ பூத்ததும் விரைவில் அழிந்துவிடும் 'மூங்கில்போல் அழியா திருக்கவேண்டும். என்பது இதன் கருத்து. 6. தங்கச்சி குவளை 1. சொற்பொருள் : தங்கச்சி குவளை என்றால், தங்கை நீர் பருகும் கலம் (தம்ளர்) என்று பொருள் இல்லை. தங்கச்சி என்னும் சொல்லுக்குக் குவளை மலர்' என்னும் பொருள் உண்டு என்பதையே இது குறிக்கும். தங்கை = குவளை என ஜூபிலி தமிழ்ப் பேரகராதியும், தங்கச்சி = குவளை எனச் சாம்பசிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகர முதலியும், தங்கைச்சி = குவளை என மூலிகை வைத்திய அகராதியும் சொற்பொருள் கூறியுள்ளன. குவளை மலருக்குத் தங்கை அல்லது தங்கச்சி என்னும் பெயர் எந்தப் பொருத்தத்தால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த அகர முதலியும் ஒரு சிறு விளக்கமும் தரவில்லை. காரணம் கண்டுபிடிக்கும் வேலையை நம்மேல் . சுமத்தி விட்டனர். மர இனப் பெயர்கள், தாவரவியல் நோக்கு - மருத்துவ நோக்கு ஆகியவற்றோடு மட்டும் இடப்படவில்லை; இலக்கிய நோக்கு, சமய நோக்கு, புராணக் கதை நோக்கு. வேடிக்கை