பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 LDU ?ణాటి விளையாட்டுச் சுவை நோக்கு ஆகியவற்றோடுங்கூட இட. பட்டுள்ளன என்பதை ஈண்டு மீண்டும் ஒரு முறை நினைவு கூர வேண்டும். இந்த அடிப்படையுடன், காரணம் * ԴՅpյած கடமையைத் தொடங்கலாம். 2. குவளைக்குத் தங்கச்சி-தங்கைச்சி-என்னும் பெயர் தரப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம். அவை வருமாறு: 2-1 முதல் காரணம்: உமாதேவியின் கையில் நீலோற்பலம் என்னும் குவளை மலர் இருப்பதாகப் புராணக் கதையால் தெரிய வருகிறது. கையில் கைச்சி' எனலாம். உள்ளது உயர்ந்தோரைக் குறிக்கிறது. உள்ளதைக் தங் கைச்சி' யாகும். தம் என்னும் பன்மை ' குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்து . ஒன்று உண்டாகச் செய்வான் வினை’ (758) என்னும் குறளில், 'தன் கைத்து' என்பது தன் கையில் உள்ள பொருள் என்னும் பொருளில் இருப்பது காண்க. 2-1 – 1 உமாதேவியின் கையில் நீலோற்பலமலர் இருப்பதற்கு உரிய சில சான்றுகள் வருமாறு: சான்றுகள்: சிற்பக் கலை பற்றிய நூல்கள் சில, செய்யுள் நடையில் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், தேவி கையில் நீலோற்பலம் வைத்திருப்பதாகக் கூறப்பட் டுள்ளது. அஃதாவது, தேவியின் சிலை செய்பவர்கள், தேவி கையில் நீலமலர் வைத்துக் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். கொண்டிருப்பதாக ஒரு மூன்று சிற்ப தம் கையில் ஒபயர்வைப்புக் கலை 8 : நூல்களில் கிரந்த எழுத்தில் உள்ள பாடற் செய்திகள் சிலவற்றைத் தமிழில் தருவாம்: காசியப சில்ப சாத்திரம் - 65 ஆம் படலத்தில், வேனின் சோமாசுகந்தத் திருமேனியின் இலக்கணம் சொல்லப் பேட்டுள்ளது. சிவன் உமையோடும், தமக்கும் உமைக்கும் இடையில் முருகனோடும் வீற்றிருக்கும் தோற்றமே சோமாசுகந்த மேனியாகும். இந்தத் தோற்றத்தில் அடங்கி புள்ள உமையின் கைகளைப் பற்றிப் பின்வருமாறு கூறப்பட் டுள்ளது. 'உமையின் இடக்கை அருள் (வரம்) வழங்கும் தோற்றத் துடனும், வலக்கை நீலோற்பலம் ஏந்தியும் இருக்க வேண்டும். அல்லது, மற்றொரு விதமாகவும் கூறுகிறேன்: இடக்கையை இடப்பக்கத் துடைக்கு வெளிப் பக்கத்தில் அமைக்க வேண்டும். முன்பு கூறியது போலவே, வலக் கையில் நீலோற்பலம் இருக்க வேண்டும்". (பாடல்: 4, 5) இந்நூலின் 66 ஆம் படலத்தில் சிவனின் சந்திரசேகரத் திருமேனியின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தேவியுடன் சிவன் தலையில் திங்கள் சூடியிருக்கும் காட்சியிது. இத்தத் தோற்றத்தில் தேவியின் கைகட்குக் கூறப்பட்டிருக்கும் இலக்கணமாவது: ‘'தேவியின் இடக்கையில் மலர் இருக்கவேண்டும். அல்லது தேவி, சிவன் பக்கத்திலுள்ள தன் வலக்கையில் தாமரை மலரை வைத்துக் கொண்டிருக்கலாம்; அல்லது, நீலோற் பலமும் வைத்துக் கொண்டிருக்கலாம்.” (6.1) இந்நூலின் 71-ஆம் படலத்தில் கல்யாணசுந்தரர் தோற்றம் சொல்லப்பட்டுள்ளது. சிவன் தேவியுடன் திருமணக் கோலத்தில் இருப்பதாகும் இது. இதில் உள்ள தேவியின் திருக்கை யிலக்கணம் வருமாறு: