பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மர இனப் அங்குத் தினந்தோறும் (நாள் முற்றும்) கூடுவதைக் கண்ட அதிகாரிகள் அம்மரத்தை வெட்டிவிட்டார்கள். (க.ச.மு.) - இதனால், கசக்கும் வேம்பினொடு இனிக்கும் வேம்பும் சருக்கரை வேம்பு என்பதில் உள்ள உண்டென அறியலாம். வேம்பு என்பது சருக்கரை என்பது இனிப்பையும், பொதுவாகக் கசப்பையும் குறிக்குமாதலின், இக்கட்டுரைக்கு, வேடிக்கையாக இனிக்கும் கசப்பு' என்னும் பெயர் இடப் பட்டது. இலை தித்தித்தாலும் சருக்கரை வேம்பின் வேறு எப்பாகத்திலாவது சிறிதளவாவது கசப்பு இருக்கலாம். 2. சார்பினால் பெற்ற பெயர்கள்: 2.1. கடிப் பகை : வுேம்புக்குக் கடிப்பகை என்னும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது. இது சார்பு காரணமாக வந்த பெயர். இங்கே, கடி என்றால் பேய். பேய்க்கு வேம்பு பகையாம். வேப்ப மரத்தைப் பேய் அண்டாதாம். இவ்வாறே, பேய் அனுகாதிருக்க வேண்டும் என்னும் நோக்குடனும் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. அண்மை யில் பிள்ள்ை பெற்ற மகளிரின் பக்கலிலும் வேப்பிலை வைப்பதுண்டு. அவர்கள் எழுந்து நடமாடுங்கால் கையில் வேப்பிலைக் கொத்தைப் பிடித்துக் கொண்டிருப்பர். பேய்" பிசாசு போன்றவற்றால் கெடுதி நேராமல் வேப்பின்ை காக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு மக்கள் செயலாற்று கின்றனர். இதனை மணிமேகலையில் உள்ள * " அகுவாய்க் கடிப்புகை ஜயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ரக்திய துண்மத்துப் புதல்வரைப் பயுந்த புனிறுதிர் கயக்கம் ' (7–73, 74, 75% என்னும் பகுதி அறிவிக்கிறது. பெயர்வைப்புக் கலை 9f 2-2. அரவாய்க் கடிப்பகை: வெண் சிறு கடுகும் பேய்க்குப் பகையாம்; அதனால் அதற்கும் கடிப்பகை என்னும் பெயர் உண்டு. எனவே, வேம்பையும் வெண்சிறு கடுகையும் வேறுபிரித்துக் காட்டுவ தற்காக, வேம்பை 'அரவாய்க் கடிப்பகை' என்றும், வெண்சிறு கடுகை ஐயவிக் கடிப்பகை என்றும் கூறுவர். ஐயவி என்றால் வெண்சிறு கடுக.ாம். Gఎు3ణణాత* விளிம்பு அரம் போன்ற கூரிய வாய்களை உடைமையால், இதனை அரவாய்க் கடிப்பகை என்பர். அரவாய்" என்பது வடிவு காரணமாக வந்தது. " அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியல் (144) எனப் பொருநராற்றுப் படையிலும் வேம்பின் அர்வாய் விளம்பப்பட்டிருப்பது காண்க. வேப்பிலையின் விளிம்பைப் பார்த்தே, பிற்காலத்தில், அரம்' என்னும் இரும்புக் கருவி செய்யப்பட்டிருக்க வேண்டும். . கடிப்பகை என்பதற்கு வெண்சிறு கடுகு என்னும் பொருள் உண்மையை, மலைபடு கடாம் என்னும் நூலில் உள்ள - - ' தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற் கடிப்பகை யனைத்துங் கேள்வி போகா' (21, 22) என்னும் பகுதியாலும், சிலப்பதிகாரத்தில் உள்ள, ' இடிக்கலப் பன்ன ஈரயின் மருங்கிற். கடிப்பகை காணுங் காட்சிய தாகி (6-146, 147) ' கடிப்பகை நுண்கலும் கவிரிதழ்க் குறுங்கலும்” (30-37)

  • ன்னும் பகுதிகளாலும், மணிமேகலையில் உள்ள