பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - மர இனப் பெயர் சார்பினால் வந்தது. தார் = மாலை, இதே பொருளில் மாறன் தார் என்ற பெயர் தேரன் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது. 2-9 ஆதிசக்தி ஆதிசக்தி, பராசக்தி (அகத்தியர் பாடல்) என்னும் பெயர்க்ளும் உண்டு, இவை மாரியம்மன் தொடர்பானவை. "ஆதி சக்தி' என்னும் பெயராட்சி, அகத்தியர் பரிபூரணம் நானு:று என்னும் நூலில், ' ஆதி சக்தி தன்னுடைய வேருங் கூட்டி’ என இடம் பெற்றுள்ளது. ஆதிசக்தி வேர் என்பது வேப்ப மர வேராகும். 2-10 அம்மா பத்தினி: . - - - * குப்பை மேனிக்குச் சிவன் பெயகும் பொத்தலைக் கையாந் தகரைக்கு முருகன் பெயரும் வைக்கப்பட்ட-து போல, வேம்புக்கு அம்மன் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆதி சக்தி, பராசக்தி என்பன போலவே, "அம்மா பத்தினி' என்பதும் மாரியம்மனைக் குறிப்பதாகும். இது தொடர்பான புராணக் கதை ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். 2-10-1 இரேணுகை: சமதக்னி என்பவரின் மனைவி இரேணுகை என்பவள். சமதக்னியைக் கார்த்த வீரியனின் பிள்ளைகள் கொன்று விட்டனர். கணவனை யிழந்த இரேணுகை தீக்குளித்தாள். அப்போது இந்திரன் மழை பெய்வித்துப் பாதியிலேயே தீயை அனைத்துவிட்டான். இரேணுகையின் உடை எரிந்து போயிற்று. உடம்பின்மேல் நெருப்புக் கொப்புளங்கள் நிரம்பத் தோன்றியிருந்தன. இந்த நிலையில் இரேணுகை பெயர்வைப்புக் கலை 95 வெளியேறிக் காட்டுக்குள் சென்று வேப்பிலைக் கொத்து களை ஒடித்து உடையாக அணிந்து கொண்டாள் . இரேணுகை புலையர் தெருவுக்குச் சென்றபோது, அவர்கள் இவளைப் பார்ப்பனப் பெண் என்று கருதிப் பச்சரிசி, மாவு, வெல்லம், இளநீர் ஆகியவற்றை உண்னக் கொடுத்தனர். வண்ணாரத் தெருவில் உடை கொடுத்தனர். இந்நிலையில் சிவன் இரேணுகையை நோக்கி, நீ சிற்றுார்களில் அம்மன் தெய்வமாய் அமர்ந்து மக்கட்கு தன்மை புரிவாயாக! உன் உடம்பிலுள்ள கொப்புளங்கள் போல் மக்கள் உடலின்மேல் கொப்புள (அம்மை) நோய் கண்ட போது வேப்பிலையால் அந்நோயைக் குணப்படுத்தச் செய்வாயாக! உன்னைப் போலவே, அம்மை நோய் கண்டவர்கள், மாவு - இளநீர் போன்ற குளிர்ந்த உணவை உண்ணச் செய்வாயாக!' என்று கூறினாராம். அவ்வாறே சிற்றுார்களில் முத்துமாரியம்மனாக இரேணுகை அமர்ந்தாள். இங்கே முத்து என்பது அம்மைக்கொப்புள முத்தைக் குறிக்கிறது. உலகியலிலும், மக்கள் அம்மைக் கொப்புளத்தை முத்து என்றே கூறுவர். இதனால்தான், மக்கள். வீட்டில் அம்மை கண்டிருக்கும்போது, மாவு இடித்துப் படைத்து வழங்குவதும் நோயாளிக்குக் குளிர்ந்த உணவு தருவதும் வழக்கமாயுள்ளன . கணவனை யிழந்த இரேணுகை தீக்குளித்ததால் பத்தினித் தெய்வமானாள். இந்தக் கதை இன்னும் பல விதமாகக் கூறப்படுகின்றன. 2-10-2 அழியாத பத்தினி: சில சிற்றுார்களில் அம்மன் கோயில்களைத் திரெளபதி கோயில் எனக் கூறுவர். இருந்த திரெளபதியம்மன் கோயில் நாளடைவில் பல சிற்றுiர்கட்கும் யம்மன் சிலவாக