பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I64 செய்யப்பட்டிருக்கலாம். இந்தத் வேம்பின் வாடை மக்களைக் காக்கலாம். அதனால் கடிப்பஆகு என்னும் பெயர் தரப்பட்டிருக்கலாம். 8. முருங்கை முதலியார் 1. ஊருடைய முதலியார் முருங்கை மரத்திற்குப் பல்வேறு பெயர்கள் சூட்டட் பட்டுள்ளன. பிரதாப சிங்கன் எழுதிய அமிர்த & fré:trah என்னும் நூலிலும் ஜூபிலி தமிழ்ப் பேரகராதியிலும் முதலியார்' என்றும், மூலிகை வைத்திய - 'ஊருடை முதலி - ஊருடம்' என்றும், சாம்பசிவம் பிள்ளை அகர முதலியில் ஊருடன் முதலி - என்றும், வைத்திய யகராதியில் 'ஊருடை' என்றும். சித்த வைத்திய அகராதியில் "ஊருடை மரம், என்றும் பெயர்கள் வழங்கப் பெற்றுள்ளன. 'ஊருடைய அகராதியில் g g డా:ణా ஊருடன் மூலி' LD GB) (GN) 1-1 முதலியார் மரமும் ஒரு என்று சொல்லப் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு முருங்கை கறவை மாடும் இருந்தால் போதும்' படுவதுண்டு. முருங்கையில் பூ, காய், கீரை ஆகியவை உணவுக்கு உதவும். பெரும்பாலும், ஊர் முழுதும் மரம் இருக்கும். சிற்றுார்களில் பல வீடுகளிலும் இருக்கும். முருங்கை ஒரு முதல் பொருள்-மூலதனம் போன்ற பொருள்; ஆதலின் 'ஊருடை முதலியார்' என்னும் பெயர் பெற்றது. 1-2 ஊருடை மரம்: முருங்கை மரம் இல்லாத வீட்டினரும் பிறர் வீட்டு மரங்களில் கீரையும் காயும் எளிதாகப் பெறுவர். வீட்டுக் காரர் மறுக்காது கொடுப்பர். ஊரார் அனைவருக்கும் பயன் தீய ஆற்றலினின் துடி 105 ஈபயர்வைப்புக் கலை இது ஊருடை மரம் எனப் புளிக்கும் மரம் ஆதலின், பயன் டுகிறது. (எங்கள் வீட்டு முருங்கை பலருக்கும் டுகிறது). மேற்கூறிய பெயர்கள் முருங்கைக்குப் பயனால் ஏற்பட்ட ஆபயர்களாகும். முருங்கை - வேர்ச் சொல் 2.1 மொரிங்கா - முரிங்ங் - முருங்கை: முருங்கைக்கு, மொரிங்கா ஒலெய்ஃபெரா, மொரிங்கா டெரிகோஸ்ப் பெர்மா' என்னும் பெயர்கள் மரநூ லாரால் (Botanists) தரப்பட்டுள்ளன. எண்ணெய் உடையது என்னும் பொருளுடைய ஒலெய்ஃபெரா என்னும் ப்ெயரும், சிறகு உள்ள விதையுடையது என்னும் பொருளுடைய டெரிகோஸ்ப் பெர்மா என்னும் பெயரும் பின்னால் தனித் தனியே விளக்கப்படும். இவற்றிற்கு முன்னால் உள்ள மொரிங்கா என்பதை ஈண்டு காண்போம். மர இன அறிவியலார், முரிங்க என்னும் மலையாளச் சொல் மொரிங்கா எனத் திரிந்து ஐரோப்பிய மொழி களில் இடம் பெற்றதாகக் கூறுகின்றனர். இதனால், முருங்கை, திராவிட மொழிச் சொல் என்பது புலனாகும். ஆனால், முருங்கை என்னும் தமிழ்ச் சொல்லே, மலையாளத்தில் முரிங்ங் எனத் திரிந்தது என்பதை மறக்கக் & t-sf.gif. பண்டைக் காலத்தில் மலையாளப் பகுதி, சேரநாடு என்னும் பெயருடன் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பண்டைய சேரநாட்டுத் தமிழ், கொச்சையான பேச்சுத் தமிழும் சமசுகிருதச் சொற்களும் சேர்ந்துவிட மலையாளம்' என்னும் தனி மொழிப் பெயர் பெற்றது.