பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மர இனம் மிருத்தல் என்னும் பொருளில் முரி, முறி, முருக்கு என்னுரு வேர்ச் சொற்கள் இருப்பதைக் கண்டோம். இந்த கோது சொற்களின் அடிப்படையில் தோன்றியதே முருங்கை என்னும் சொல். எனவே, முருங்கை என்பது, திராவிட மொழிகளின் தலைமை மொழியாகிய தமிழ் மொழியில், சொல்லே என்பது பெறப்படும். உண்மை இவ்வாறிருக்க, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கள மொழியின் முருங்கா என்னும் சொல்லே தமிழில் முருங்கை என வந்தது என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. தமிழ், சமசுகிருதம், பிராகிருதம் முதலிய இந்திய மொழிச் சொற்களும் சில ஐரோப்பிய மொழிச் சொற்களும் சிங்கள மொழியல் கலந்துள்ளன. எனவே, பெருந்தேவனார் கூற்றால், முருங்கை என்னும் தமிழ்ச் சொல் சிங்களத்தில் முருங்கா எனத் திரிந்து வழங்கப் படுகிறது என்னும் உண்மை மறைமுகமாகத் தெரிகிறது. மற்றும், முருங்கை என்னும் தமிழ்ச் சொல்லே ஐரோப்பிய மொழியில் எனத் திரிந்தது என்பதையும் மறத்த லாகாது. பாலி, மொரிங்கா' 3. பயனும் உடற்கூறும்: 3-1 சீக்கிர பத்திரம்: சிக்கிரம் = உடனே வரைவு; பத்திரம் = இலை. மூன்று வகையில் முருங்கையைச் சீக்கிர பத்திரம்' என்று கூறலாம். கிளையை வெட்டி நட்டால், மற்ற மரங்களினும் இதில் சீக்கிரம் இலைத்துளிர் தோன்றிவிடும். இது முதல் வகை. இரண்டாவது வகை: முருங்கைக் கீரையை மரத்திலிருந்து பிரித்ததும் உடனே சமைத்துவிட வேண்டும். இன்றைக்குக் கீரை ஒடித்து நாளைக்குச் சமைக்க முடியாது என்பது மட்டுமன்று-காலையில் ஒடித்து மாலையில் சமைத் கீரை கசங்கி வாடி வதங்கிவிடும். தாலும் நன்றாயிராது; கீரையைச் சிறிது நேரம் மூன்றாம் வகை: முருங்கைக் பெயர்வைப்புக் கலை | 13 வெந்ததுமே அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். மற்ற சில கீரைகளைப் போல் நெடுநேரம் வேகவைக்கக் கூடாது. அவ்வாறு செய்யின், கீரை கறுத்து விடும்-கசந்து விடும். எனவே, முருங்கைக்குச் சீக்கிர பத்திரம்' என்னும் பெயர் சாலவும் தகும். இஃதும் பயனாலும் உடற் கூறாலும் பெற்ற பெயராகும். 3-2 முக்கக்தம்: முருங்கைக்கு முக்கந்தம் என்னும் பெயர் உள்ளமையால் முருங்கை தொடர்பாக மூன்று வகைகள் காட்டப்பவேண்டும். ஐந்து விதமான மூவகைகள் காட்டலாம், அவை முறையே வருமாறு:- * 1. முருங்கை இலைகள் மும்மடி இறகுக் கூட்டிலை 锡》 - - - @°一 魏绮 #8 臀 يجيتي /* ^ *リ.","。 gて「r の3ー '_。 - - - - ஒரு முருக!கைக صه سgسه هه عم களாம். கீரையுடன் - எடுத்துக் கொள்ளின், இரண்டு கைகளையும் இரு பக்கமும் நீட்டியது போன்ற அமைப்பு ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று மூன்றாவது அமைப்புக்கு மேல் சில காம்புகளில் மூன்றிற்கு தோன்றலாம். இருப்பதைக் காணலாம். நுனி கொத்தாக இருக்கும். மேற்பட்ட அடுக்குகள் இருப்பதுபோல் ஆனால் பெரும்பாலானவற்றுள் மூன்றே இருக்கும், 2. முருங்கைக் கனிச் சுவர் (காய்ச் சுவர்) மூன்று பிரிவுகளாகப் (Valves) பிளந்து அமையும். 3. முருங்கைக் காய் மூன்று பட்டைகளாக இருக்கும். 4. முருங்கை விதையில் மூன்று சிறகுகள் நீட்டிக் கொண்டிருக்கும். 5. மற்ற மர இனங்களினும் முருங்கைக்கு ஒரு தனிச் கீரை, பூ, காய் ஆகிய மூன்றாலும் சிலவற்றில் இம் சிறப்பு உண்டு. உணவுக்கு உதவுவது முருங்கையே.