பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மர இஆழ். மேற்காட்டியவற்றுள், கண்ணோய் விலகும். "జి குளிரும்'. 'விழிக்குக் குளிர்ச்சியும் சேரும். கட்ஆக (கண்ணுக்குக்) குளிர்ச்சி தரும் என்னும் பகுதிகள் கானது தக்கன. மற்றும், முருகேச முதலியார் தம் பொருட் பண்பு நூலில், முருங்கை இலை இரசத்தைக் கண்ணில் விட வலிகள் போம்; இதைத் தேனுடன் சேர்த்துக் கண் இமை களில் தேய்க்கலாம்' என்று கூறியுள்ளார். (இரசம்= பச்சைச் சாறு). எனவே, கிருஷ்ண கந்தம் என்னும் பெயர் முருங்கைக்குப் பொருந்தும். இது பயனால் வந்தது. 3.7 டெரிகோஸ்ப் பெர்மா: மரநூலார் (Botanists) முருங்கையை, மொரிங்கா G) –f'Garrsivili Guri Lorr“ (Moringa Pterygosperma) Grgir gyub பெயரால் வழங்குகின்றனர். முருங்கை என்னும் தமிழப் பெயரே மரநூலில் மொரிங்கா எனப்பட்டுள்ளது. இது பற்றிய உண்மையை, இதே கட்டுரையில் உள்ள முருங்கை - வேர்ச்சொல் என்னும் த்லைப்புடைய பகுதியால் அறிய லாம். டெரிகோஸ்ப் பெர்மா என்னும் பெயரின் பொருள். 'சிறகு உள்ள விதைகளை உடையது!’ என்பதாகும். Pterygosperma argorgoth Q&mdivablo, Ptery a sort igil 8.2% என்னும் பொருள் தொடர்பானது: gos என்பதும் அன்னதே. Perma என்பது, மயிர் என்னும் பொருள் தொடர்பானது. சிறகில் மயிர் இருக்குமல்லவா? Ptery என்பதிலிருந்து 'P' என்பதை நீக்கினால், tery என்பது மூன்று என்னும் பொருள் தொடர்பு உடையதாகும். இப்பெயருக்கு ஏற்ப. முருங்கைச் காய்க்குள் உள்ள விதைகளைத் தனித் தனியே எடுத்துப் பார்க்கின், விதையின் மூன்று பக்கங்களில் சிறகு (இறக்கை, போன்ற பகுதி நீட்டிக்கொண்டிருப்பதை அறியலாம். இதனால் இப்பெயர் தரப்பட்டது. இஃது உடற்கூறால் 12] பெயர்வைப்புக் கலை பெற்ற பெயராகும். அடுத்து ஒலெய்ஃபெரா என்பதை அறியலாம். 3–8. 9Geodü:.®ug m (Oleifera): மரநூலாரால் தரப்பட்டுள்ள ஒலெய்ஃபெரா என்னும் பெயருக்கு எண்ணெய் உள்ளது' என்று பொருளாம். GpG4 (MM. Mousset), gulfur, (Dupuis) என்னும் பிரெஞ்சுத் துறவியர் இருவர் தொகுத்துள்ள பிரெஞ்சு - தமிழ் அகரமுதலியில், Oleifere என்னும் சொல்லுக்கு, "எண்ணெய் தரும் , எண்ணெய் உற்பத்தியாக்கும்' - எனப் பொருள் தரப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின் விதையி லிருந்து பென் (Ben) என்னும் ஒருவகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஒவியர்கள் பயன் படுத்துவார்களாம். எனவே, இந்த எண்ணெயை அடக்கிக் بی بی ص ۹جم بی ث-------- س- ۹ گ 苓黑社 " : تا از این بی نتی و یا عاج . . ، முருங்கைக்கு ஒலெய்ஃபெரா என்னும் பெயர், பயனாலும் உடற்கூறாலும் பெறப்பட்டதாகும். 3-9. சிற்றிலைப் பூ: முருங்கைக் கீரை என்னும் முருங்கை இலை, எத்தனையோ மரங்களின் இலைகளைவிட மிகவும் சிறியதா தலின், சிற்றிலைப் பூ எ ன்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளது. சிற்றிலைப்பூ என்பது சினையாகு பெயராய் முருங்கை மரத்தைக் குறிக்கிறது. இஃது உடற் கூறால் பெற்ற பெயர். 3-10. மூல பர்ணி: பர்ணம் என்றால் இலை. இலையால் அமைக்கப்பட்ட குடிசை பர்ன சாலை' என வழங்கப்படுவது காண்க. பர்னம் உடையது பர்னி - அதாவது - மரம் ஆகும். முருங்கையின் பர்ணம் (இலை) மூலபர்ணம் ஆகும். மூலம் என்பதற்கு இங்கே முக்கியம்-முதன்மை என்பன பொருளாம்.