பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மர இனப் 6.5 இவ்வாறு ஐ' ஆகிய கபம் சேர்ந்தது மூல கபம் ஆகும். நோக்கின், பெயர்க் காரணம் சொல் விளையாட்டே. 3-12. முகக் கந்த மரம்: இந்தப் பெயர் சித்த வைத்திய அகராதியில் தரப்பட் டுள்ளது. முகம் என்பதற்கு உரிய பல்வேறு பொருள்களுள் முதன்மை' என்பதும் ஒன்றாகும். இதற்குச் சான்றாக நமது முகம் என்னும் உறுப்டே போதுமானது, எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்' என்பது முதியோர் மொழி. சிரசே பிரதானம் என்றால், தலையே முதன்மையானது என்று பொருளாம். தலையில் முகம் முதன்மையான தல்லவா? - கந்தம் என்பதற்கு, முன்னர் முக்கந்தம்' என்னும் பெயர் விளக்கத்தில் கூறியுள்ளதை ஈண்டும் கொள்ளலாம். கந்த மரம் என்பதற்கு உயர்வுடைய - சிறப்புடைய மரம் எனவும் பொருள் கொள்ளலாம். சாலி என்பது ஒருவகை உயர்ந்த் நெல்லாகும். அதன் உயர்வை, மணிமேகலை நூல், ' கங்த சாலியின் கழிபெரு வித்து ' (10–46) எனக் கந்தம் என்னும் அடைமொழியால் அறிவிக்கின்றது. எனவே, மிகுந்த வலிமையூட்டும் பூ-காய்-கீரை ஆகிய வற்றால் சாலவும் உயர்ந்த-சிறந்த-முதன்மையான பயன் தரும் மரம் என்னும் பொருளில், முருங்கைக்கு முகக் கந்த மரம் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது பயனால் பெற்ற பெயராகும். 4. பண்பும் பயனும்: 4-1 குரு கண்டகம்: குரு என்னும் சொல்லுக்குப் பல வகைப் பொருள்கள் உண்டு. இவண் இருவகைப் பொருள்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். 127 பெயர்வைப்புக் கலை 4.1-1 . முதல் வகை: குரு= புண் , கொப்புள நோய், வேர்க்குரு. இலக்கியச் சான்றுகள் முறையே வருமாறு: இம்மூன்றுக் 1. புண் - நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். ' மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர்தந்தாங்கே செல்கிய செல்கைத்து உலகை என் கானும் - (3627) கொப்புள நோய்: சிலம்பு - உரைபெறு கட்டுரை: 2 அன்று தொட்டுப் பாண்டிய னாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்பு கோயும் குருவும் தொடர ...” பிங்கலம் - ஒருசொல் பல்பொருள் 3. வேர்க்குரு: ఢu ఢ5) శ్రీ : ' குரவனும் கோயும் கிறமும் பாசமும் அரசனும் குருவெனல் ஆகும் என்ப” (340) ஈண்டு, குரு என்பது நோய்க் குருவை - அதாவது - வேர்க்குருவை இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ளது. இனிக் கண்டகம் என்னும் சொற்பொருள் காணலாம். கண்டகம்=கொடுமை. கண்டகப் பழிப்பதகரை' (உபதேச காண்டம் - சிவபுண் (289) கண்டகம், உடையவர் - கொடுமை செய்பவர் கண்டகர் ஆவார். ' கன்னமே கொடு போயின கண்டகர்' (இரகு வமிசம் - யாக - 42) கண்டகம் உடையவள் - கொடுமை செய்பவள் கண்டகி ஆவாள்.