பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மர இனப் கைகளையும் கீழே ஊன்றி இரண்டு கால்களையும் மேலே தூக்கி உடம்பை நிமிர்த்தியும்-அதாவது-தலை கீழாய் நின்று கொண்டும் தவம் புரிபவர் பலர், இறைவனே, இன்னும் உன்னை அறியார்; அவர்தம் பிறவி என்று நீங்குமோகூறுவாய்' என்பது பாடல் பகுதியின் கருத்து. - உலகியலில், ஒருவரது செயலை மறுத்துப் பேசும் மற்றொருவர், "நீ ஒற்றைக் காலில் நின்றாலும் நடக்காது” எனவும், நீ தலைகீழாய் நின்றாலும் ஒன்றும் முடியாது’ எனவும் கூறுவது ஈண்டு இணைத்து நோக்கற்பாலது. இந்த அடிப்படையில் நாரையையும் வெளவாலையும் அனுகு வோம்: 5-2. போலித் தவசிகள்; நாரை என்பது கொக்கு. நீர் மடைத்தலையில் கொக்கு ஒரு காலை ஊன்றியும் மற்றொரு காலை மேலே தூக்கியும் மீன்களின் வருகையை எதிர்நோக்கியிருக்கும். சிறிய மீன் களை விட்டுப் பெரிய மீனை எதிர்பார்ப்பது அதன் குறி. இரண்டு கால்களையும் ஊன்றிக் கொண்டு நின்றால், ஏதேர் பறவை நம்மைப் பிடிக்க நிற்கிறது என அறிந்து மீன்கள் அப்பக்கம் வாராவாம். ஒற்றைக் காலில் நின்றால், ஏதோ செடி-பூண்டு இருப்பதாக எண்ணி மீன்கள் வருமாம். இச் செய்தியை ஒளவையின் மூதுரையில் உள்ள, " ..... ... மடைத் தலையில் ஒடுமீன் ஒட உறுமின் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு’ (16) என்னும் பாடல் பகுதியால் அறியலாம், ஒற்றைக் காலி"

  • 。彩。雲

நின்று தவஞ்செய்வோர்போல் கொக்கின் செயல் இருந்: தால் ஒப்புமை கருதி அதற்குத் தவசி என்னும் മli് தரப்பட்டது. பெயர்வைப்புக் கலை 135 வெளவால் கூரையையோ மரக்கிளையையோ கால் களால் பற்றிக்கொண்டு தலைகீழாய்த் தொங்கும். வெளவால் வீட்டுக்கு விருந்தினராய்ப் போனால் தலை கீழாய்த் தொங்க வேண்டும்' என்பது ஒரு பழமொழி, தலைகீழாய் நின்று தவஞ் செய்பவர்போல் வெளவாலின் செயல் காணப்படுவதால் அதற்கும் தவசி என்னும் பெயர் தரப்பட்டது. இந்தப் போலித் தவசிகளின் காப்படை யோடு முருங்கை விதையை அணுகுவாம்: 5-3 முருங்கை விதை: முருங்கை விதை காய்க்குள் இருக்கும். முருங்கை மரத்தில் காய்கள் நீளமாய்த் தொங்கும். இக்காட்சி தலை கீழாய்த் தொங்குவதுபோல் தோன்றும். மற்ற மரத்துக் காய்கள் முருங்கைக் காய்கள் போல் நீளமாகத் தொங்குவ தில்லை. கொன்றைக்காய் போன்ற சில நீளமாயிருப்பினும் முருங்கையளவு இருப்பதில்லை; இருப்பினும், முருங்கையைப் போன்று அம்மரங்கள் மக்கட்கு மிகவும் அறிமுகமானவை யல்ல. அறிமுகமான புடலங்காய் முருங்கைக் காயினும் நீளமாகத் தொங்குகிறதே என்று வினவலாம். புடல் மரம் அன்று; ஒரு கொடி. அதைக் கூரைமேல் படரவி: ண் காப் கூரையின் மேல் படுத்துக் கொண்டிருக்கும்; பந்தர் போடாமல் வாளா விட்டுவிடின் காய் தரையில் படுத்துக் கிடக்கும். எனவே, தலைகீழாய்த் தவஞ் செய்வோர்போல் நீளமாகத் தொங்குவதும் மக்களுக்கு மிகவும் அறிமுகமாகிப் பெரும்பயன் தருவதுமாகிய காய் முருங்கைக் காயே. எனவே, அதற்குத் தவசி என்னும் பெயர் பொருந்தலாம். மற்றும் ஒருவகைப் பொருத்தம் கூறலாம்: தவசிகள் நீருக்குள் மூழ்கியும் நிலத்திற்குள் புதைந்தும் வெளியில் புற்றுமாய் மரமுமாய் உற்றும் உடலை மதைத்துத் தவஞ் சிெய்ள்து ஆன்டல்லவா? அதுபோல, gpo soc;