பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Medieale De L' Inde” stsörSlh QLuG sol–u–H)GSu மரஇன மருத்துவம் பற்றிய சுருக்கத் தொகுப்பான பிரெஞ்சு நூலில், இந்திய மொழிகள் சிலவற்றிலும் ஆங்கிலத்திலும் முருங்கைக்குத் தரப்பட்டுள்ள பெயர்களைப் பின்வருமாறு கூறியுள்ளார்: “MORINGA PTERYGOSPERMA Gaertner. Syn. Moringa oleifera Lamk. Sobhanjana, Sigru (Sanscrit), Mourounguemaram (Tam), Sajina (Beng), Sahinjan (Hind), Moronguier ou Arbre des Pauvres (Pondich), The Drum-Stick ou Horse-radish tree (Ang!.”) இதன் பொருள் விவரமாவது:- முருங்கைக்கு, சம்சு கிருதத்தில் சோபாஞ்சனா, சிக்ரு என்னும் பெயர்களும், தமிழில் முருங்கே மரம் என்னும் பெயரும், வங்காளத்தில் சஜினா என்னும் பெயரும் இந்தியில் சகிஞ்சன் என்னும் Quuu@ιb, g/i/&)av $£)av Drura-Stick, Horse-radish (1 igrú ஸ்டிக், ஃஆர்சு ரேடிஷ்) என்னும் பெயர்களும் உண்டு என்பது இதன் கருத்தாகும். இந்தப் பகுதியில் ஆங்கிலப் பெயருக்கு முன்னால் 2. air srr Moronguier ou Arbe des Pauwes (Pondich. } என்னும் பகுதி குறிப்பிடத்தக்கது. இதன் கருத்தாவது:புதுச்சேரிப் பகுதியில் இந்தமரம் (Moronguier) மொரொங் குயே எனப்பெயர் வழங்கப்படுகிறது, இஃது ஏழைகட்குப். பயன்படும் மரமாகும் என்பது கருத்து. Moronguier என்பதன் இறுதியில் உள்ள R என்னும் எழுத்து ஒலிப்பு பெறாத உவமை (Silent) எழுத்தாகும். s பிரெஞ்சு மொழியில் மரப் பெயர்கள் ier என்னும் ஈற்றில் முடியும். எடுத்துக்காட்டாக, முக்கனி மரப் பெயர் களைப் பார்ப்போம்: மாமரம் = Manguier, வாழை மரம் = Bananier. uøvrr uppruh = Ja quier ar zëri usar. எனவே பெயர்வைப்புக் கலை 143 Moronguier என்பதின் ஈற்றில் உள்ள 'ier என்பதை நீக்கி ஒலித்தால், "மொரொங்குய் என ஒலிக்கப்பெறும். அதாவது, புதுச்சேரிப் பகுதியில் இவ்வாறு ஒலிக்கப் பெறுகிறதாம். முருங்கை என்பதைச் சிலர் கொச்சையாக மெ:ரொங்குய்' என ஒலிப்பது இயல்பே. முருங்கை ஏழைகள் பயன்படுத்தும் மரம் என்னும் கருத்து குறிப்பிடத் தக்கது (மேலும் மானத்தை வாங்காமல் இதோடு விட்டாரே). அன்றாடம் வேலை செய்து கூலி பெற்று உணவுப் பொருள் வாங்கி ஆக்கியுண்ணும் ஏழை மக்கள், காற்றுடன் மழை கலந்து பெய்யுங்காலத்தில் வெளியில் சென்று வேலை செய்ய முடியாமையால் உணவின்றி வருந்துவர். அப்போது, காற்று மழையால் முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து கிடக்கும். அந்த மரக்கீரையைக் கொண்டு வந்து உப்பிட்டுத் துவட்டி உண்டு. சோறில்லாமலே அன்றைய நாளைக் கழிப்பது ஏழைகளிடையே உண்டு. முருங்கை ஏழைகளின் மரம் என்பது சரிதானே. இதுகாறுங் கூறியவற்றால், முருங்கை என்னும் தமிழ்ப் பெயரே, பிரெஞ்சுக்காரராலும் மரநூலாராலும், மொராங், மொராங்கா, மொரொங்குய், மொரிங்கா எனப் பலவாறு திரித்து வழங்கப்பட்டது என்பது புலனாகும். 7-2. ஆங்கிலப் பெயர்கள்: 7-2-1. Drum Stick Tree: குட்டையும் கட்டையும் சுணையுமா யில்லாமல், சிறிது நீளமாகவும் மெல்லியதாகவும் வழவழப்பாகவும் உள்ள வெண்டைக் காய்க்கு ஆங்கிலேயர் தம் மொழியில் Lady's Finger' எனப் பெயரிட்டனர். அதாவது, - பெண்ணின் கை விரல்' என்பது பொருளாகும். பெண்களின் கைவிரல் போல் வெண்டைக் காய் உள்ளதாம். முருங்கை மரத்தை