பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மர இனப் அ) அகத்தியர் குண பாடம்: ' குரல்கம்மல் காமாலை குட்டமொடு சோபை உரற்பாண்டு பல்நோய் ஒழியும் - கிரற்சொன்ன மெய்யாங் தகரையொத்த மீளியண்ணு கற்புலத்துக் கையாங் தகரையொத்தக் கால் ’’. பொற்றலைக் கையாந்தகரை பொன்னிற மாக்கு முடலை சுத்தமுறக் கட்குச் சுகங்கொடுக்கும் சிற்றிடையாய் சிந்துாரங் கட்கு ஆகும், சிங்தை தனைத்துலக்கும், உங்திவளன் குன்மம் ஒழிக்கும்,’’ கருத்து: கையாந்தகரை, குரல் உறுப்பு நோய், காமாலை, குட்டம், விக்கம், பாண்டு, பல்நோய் ஆகியவற். றைக் குணப்படுத்தும்; உடலுக்கு மிக்க வலிமையும் பொன்னிறமும் தரும்; கண்ணுக்கு (கட்கு) நலம் செய்யும், பல சிந்துரங்கள் செய்ய உதவும்; மனத்தெளிவு உண்டாக் கும்; குன்மம் (வயிற்றுவலி) போக்கும். ஆ) தேரன் வெண்பா திருவுண் டாம், ஞானத் தெளிவுண்டாம், மேலை உருவுண்டாம், உள்ளதெல்லாம் உண்டாம் - குருவுண்டாம், பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாத்த கரைத் தன்னாகத் தின்றாகத் தான், கருத்து: பொற்றலைக் கையாந்தகரையைச் சமைத்து உண்டால், திருவும் அறிவுத் தெளிவும் மேலான உருவும் மற்ற பல நன்மைகளும் உண்டாகும்; கண்ணொளியும் (குரு) பெருகும். பெயர்வைப்புக் கலை 159 மேலுள்ள செய்யுட் சான்றுகளால், இம்மூலிகையின் பொதுப் பயன்கள் புலனாகும். 3-2-6. மைக் கரிப்பான் இப் பெயர் சி.வை. அகராதியில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி வேலூர் கண்ணப்பரின் நம் நாட்டு மூலிகைகள்' என்னும் நூலில் உள்ளது வருமாறு': 'கரிசலாங் கண்ணி இலைச்சாற்றை ன்டுத்து மாதுளம் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல மை செய்து கண் இமைகளுக்குத் திட்டிவர, கண்கள் மிக்க ஒளியும் கவர்ச்சியும் உடையனவாய் விளங்குவதுடன், கண்நோய் வராமலும் பாதுகாக்கும் - இவ்வாறு மை செய்ய உதவிக் கண்ணுக்குப் பயன் அளிப்பதால் : ; :ன் காரணமாக இப்பெயர் காப்பு:" டுள்ளது. 3-3 பண்பால் பெற்ற பெயர்கள் திரிபுரந் தீயிட்டோன், திரிபுரந் தீயிட்டோன் புதல்வன் என்னும் பெயர்கள் சா.சி.பி. அகரமுதலியில் தரப் பட்டுள்ளன. கரிசலாங் கண் ணியினமும் உடலுக்கு வெப்பம் தரும் பண்பினது என்பது இக்கட்டுரையில் முன்னர்க் கூறப் பட்டுள்ளது. எனவே, வெப்பம் தரும் பண்பின் அடிப் படையில் இப்பெயர்கள் தரப்பட்டுள்ளன. 3-3-1.2 கரப்பான், கரிப்பான் இதன் கீரையைச் சமைத்து உண்ணுங்கால் தொண் டையில் கரகரப்பு உணர்வும் ஒரு வகைக் கரிப்புச் கதுைபும் தெரியும். (இது சொந்தப் பட்டறிவு). இதனால் இதற்குக் கரப்பான் (சி.வை. அ.) கரிப்பான் (மலை) என்னும் பெயர்கள்