பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மர இனப் குளம். ஆடகம்=பொன். மற்றும், வேந்தர்கள் செயற்கை யாகப் பொன்னால் தாமரப் பூ செய்து பாணர்க்கு அளிப் பதும் உண்டு, இது செந்தாமரை போன்றதாகும். புறநானூறு - 141 : " பாணர் சூடிய பசும்பொற் றாமரை” பதிப்பற்றுப் பத்து - 48. ' பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி' எனவே, திருமாலின் க ண்ணாகிய செந்தாமரை. பொற்றாமரை எனப்படுதல் மரபே. - பொற்றலைக் கையாந் தகரை, பொன்னிறப் பூவுடன் இருப்பதால், பொற்றாமரையாகிய செந்தாமரையை நினை ஆட்டுகிறது. இந்தப் பொருத்தத்தால், திருமாலின் கண்ணன் (சா.சி.பி.) என்னும் பெயர் இம்மூலிகைக்குத் தரப்பட்டது. 4-2-2-6. திரிபுரங் தீயிட்டோன் புதல்வன்: திரிபுரந் தியிட்டோன சிவன் என்பது முன்னர் விளக்கப் பட்டுள்ளது. அந்தச் சிவன் புதல்வன் முருகன் ஆவான். அம்முருகனைச் சுட்டும் திரிபுரம் தீயிட்டோன் புதல்வன் என்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியில் இம்மூலிகைக்குத் தரப்பட்டுள்ளது. செந்தாமரையாகிய பொற்றாமரையின் நிலையையே இந்தப் பெயருக்கும் கொள்ளல்வேண்டும். முருகன் சேயோன் எனப்படுவான். செந்நிறத்தனாக முருகனைக் கூறல் மரபு. திருமுருகாற்றுப் படையிலுள்ள, • உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு (1, 2) பெயர்வைப்புக் கலை 171 என்னும் முற்பகுதி ஈண்டு நோக்கத் தக்கது. நீலக்கடலில் செஞ்ஞாயிறு தோன்றுவதுபோல, நீல மயில்மேல் செந்நிற முருகன் தோன்றுவதாக அறிவிக்கிறது இப்பகுதி. செஞ்ஞாயிறு, செந்நிற முருகன் எனினும், பொதுவாக, ஞாயிற்றின் நிறமும் முருகனின் நிறமும் பொன்னிறமே யாகும். உலகியலில், நல்ல நிறமுடன் இருக்கும் ஒருவரை, மிகுந்த சிவப்பாயிருக்கிறார் என்பது மரபு. அவரது சிவப்பு என்பது, ஒருவகை மஞ்சள் நிறமான - பொன்னிறமே யாகும். குங்குமம் போன்றும் பவழம் போன்றும் யாரும் சிவப்பாயிருப்பதில்லை. சிவப்பு என்பது பொன்னிறமே. ' குணதிசை மருங்கில் காள்முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக் எள்ளறு திருமுகம் பொலியப் பெறுதலும்' (5:139-142) என்னும் மணிமேகல்ைப் பகுதியில், புகார் நகரம் என்னும் பெண்ணுக்கு, மாலையில், வெண்திங்கள் ஒருபுறம் வெள்ளைத் தோடாகவும், செஞ்ஞாயிறு ஒருபக்கம் பொன் தோடாகவும் பொலிவதாகக் கூறப்பட்டிருப்பது காண்க. செஞ்ஞாயிறு பொன்தோடுபோல் உள்ளதாம். மாலையில், ஞாயிறு தங்கம் உருக்கி வார்த்த தட்டுபோல் இருப்பதாகக் கூறும் புனைவு (வருணனை) புலவர்கட்குப் புதிதன்று. இருபதாம் நூற்றாண்டில் எழுந்த அம்பிகாபதி காதல் காப்பியம்’ என்னும் நூலிலும், - " தங்கம் உருக்கிய தட்டேய் ஞாயிறு திங்கள் வருமுன், திகழும் குடயால் மங்கி மறைக்தான் மாலையும் கழிந்தது’’ (18-3.4.5) என இப்புனைவு இடம் பெற்றுள்ளமை காண்க. ஈண்டு, ஞாயிற்றின் நிறம் குறித்து அறிவியல் அடிப்படையில்