பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

В В மறவர் சீமை

இருக்காது. இராமேஸ்வரம் திருக்கோயில் இந்திய நாட்டின் பெருமைமிக்க பெருந்தலமாக மாறி இருக்காது. அது சரி உனது பெயர்

என்னவென்று சொல்லவில்லையே?" சேர்வைக்காரர் கேட்டார்.

"என் பெயர் பொன் ஆத்தாள்"

"பொன் ஆத்தாள் உன் மாமன் பெயரையும் சொல்லவில்லை. நீ சொல்லமாட்டாய்!"

சிரித்துக்கொண்டே சொன்னார் சித்திரங்குடி சேர்வைக்காரர். பொன்ஆத்தாளும் வெட்கத்துடன் தன் தோழியைப் பார்த்தாள்.

"அவுக பெயர் வீரக்காளை! அவளது தோழி சொன்னாள் "வீரக்காளை!............. வீரக்காளை!" சேர்வைக்காரர் சில நொடிகளில யோசித்தார். பிறகு வீரக்காளையைப் பற்றிய தெளிவு ஏற்பட்டவராக "ஆம் என்னிடம் நெருக்கமான தொடர்பு உடையவர். இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது. வீரக்காளை பாஞ்சாலக்குறிச்சிக்கு ஒரு முக்கியமான காரியமாகப் போய் இருக்கிறார். இரண்டொரு நாட்களில் திரும்பி வந்து என்னைச் சந்திப்பார்".

இதைக் கேட்ட பொன் ஆத்தாளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவளது அழகிய, அகன்ற கண்கள் மேலும் அகலமாக விரிந்து சேர்வைக்காரர் முகத்தை ஆவலுடன் கவனித்தார்.

"எப்படியும் ஒரு வாரத்தில் உனது மாமனை அனுப்பி வைக்கிறேன். திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரண்டொரு நாட்களில் திருப்பி அனுப்பி வைத்துவிட வேண்டும். என்ன சரிதானா?"

"ஆகட்டும் அப்படியே அனுப்பி வைத்து விடுகிறோம் ஐயா"