பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= 89

"இல்லை கலியாணச் சாப்பாட்டில் மாப்பிள்ளை அசந்துபோய் உன்னிடமே இருந்து விடுவார்" ஆதலால் நானே வந்து அவரை அழைத்துக் கொள்வேன். புன்னகையுடன் சொன்னார் சேர்வைக்காரர்.

"திருப்பூட்டு நாளுக்கு ஐயா வந்துவிட்டால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். அவசியம் வந்து சேருங்கள் ஐயா"

"நான் அப்பொழுது எங்கே இருப்பேன் என்று சொல்ல முடியாது. முடிந்தவரை வருவதற்கு முயற்சிக்கிறேன்."

"பிறகு நாங்கள் போய் வருகிறோம் உத்தரவு கொடுங்கள்"

பொன் ஆத்தாளும் அவள் தோழியும் அங்கிருந்து செல்வதை கூர்ந்து கவனித்துவிட்டுச் சொன்னார், "பொன் ஆத்தாள் போன்ற பெண்கள் நமது சீமையில் இருப்பதனால்தான் நமது பாரம்பரிய வீரமும், பிறந்த மண்ணின் பாசமும் தொடர்கிறது." பிறகு வீரர்களைப் பார்த்து, "சத்திரத்திற்குள் நன்கு தேடிப்பார்த்து விட்டீர்களா? அந்தக் கோழை - நமது வீரர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு கழுவிய மீன்களில் நழுவிய மீனைப் போல எங்கோ தப்பிச் சென்றான் எங்கே நம்மைவிட்டு போய்விடுவான். வாருங்கள் தேடிப்பார்ப்போம்" என்று குதிரை மேல் ஏறி அமர்ந்தார்.

"அந்த அம்பலக்காரன் குரங்குடி சத்திரத்திற்கு போய் இருப்பான். அல்லது செவ்வல்பட்டி ரெட்டியாரிடம் அடைக்கலம் பெற்று இருப்பான். வாருங்கள் நாம் அங்கே செல்வோம்".

குதிரைகள் குளம்புகள் கிளறிய புழுதிப் படலத்தில் சேர்வைக்காரரும் குதிரை வீரர்களும் தெற்கு நோக்கிச் சென்று மறைந்தனர்.