உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

- மறவர் சீமை

15. மீண்டும் கமுதிக் கோட்டையில்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றிப் பரங்கியரை முற்றாக முதுகளத்துர், கமுதி பகுதிகளில் இருந்து துரத்துவதற்குக் கிளர்ச்சிக்காரர்கள் சித்திரங்குடி சேர்வைக்காரர் தலைமையில் நடத்திய வீரப் போரினையும், அதன் விளைவாக மறக்குடி மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் முன்பு பார்த்தோம். அந்த நிகழ்விற்குப் பிறகு கும்பெனியார் இந்தக் கோட்டையைத் தொடர்ந்து மறவர் சீமையின் வலிமைமிக்க அரணாக மாற்றி இருந்தனர்.

இந்தக் கோட்டையைக் கிளர்ச்சிக் காரர்கள் கைப்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் மீண்டும் அதிகரித்தது. காரணம், சிவகெங்கைச் சீமை பிரதானிகளான சின்னமருது, பெரிய மருது சேர்வைக் காரர்களைத் தங்களது நம்பிக்கைக்கு உரிய நண்பர்களாகக் கருதிய கும்பெனியார், இப்பொழுது தங்களது கணிப்புத் தவறு என்பதை உணர்ந்தனர். அவர்களுக்குப் பரம விரோதிகளான பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான ஊமை குமாரசாமி நாயக்கருக்கு ஆயுத உதவி அளித்து வருவதையும், முதுகளத்தூர் பகுதியில்