பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - = - - மறவர் சீமை

மிகுந்த பாதுகாப்புடன் இருந்ததில் கிளர்ச்சிக்காரர்களது முயற்சி நிறைவேறவில்லை என்றாலும், முற்றுகையை பலநாட்கள் மேற்கொண்டனர். கும்பெனியாரது பிடிப்பில் எவ்விதத் தளர்வையும் ஏற்படுத்த முடியவில்லை.

அதே நேரத்தில் பாஞ்சாலக் குறிச்சி கோட்டை மீது கும்பெனியார் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தனர். காரணம் முந்தைய இரண்டு தாக்குதல்களிலும், 2.2.1801, 10.2.1801ம் நாட்களில் நடைபெற்ற அவர்களது தாக்குதல் பாஞ்சாலக்குறிச்சியைக் காத்துநின்ற வீரமறவர்கள் ஓட ஓட விரட்டியடித்தனர். ஆம், ஏற்கனவே நாயை முயல்கள் வீராவேசத்துடன் விரட்டியடித்த மண்ணல்லவா? பாஞ்சாலக்குறிச்சி மண். இந்தக் காட்சியை நேரில் கண்டு வீறுகொண்ட முதலாவது கட்ட பொம்மு நாயக்கர், தமது கோட்டையை அந்த மகத்தான வீர மண்ணின் மீதுதானே எழுப்பினான்! ஆனால், புறமுதுகிட்டு ஓடிய பரங்கிகள் சளைத்துவிடவில்லை. பக்கத்துப் பாளையக்காரரான எட்டையபுரத்தாரிடம் பலமுறை ஆலோசனை கலந்து தங்களது போர் உத்திகளை மாற்றிப் புதிய தாக்குதலுக்கான திட்டமொன்றைத் தயாரித்தனர். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டு இருந்த ராணுவ அணிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அத்துடன் இலங்கையின் சிங்கள அணியும், மலேயா நாட்டு அணிகளும், தூத்துக்குடி கடல் வழியாக வரவழைக்கப்பட்டன. கூடுதலான படைகள், பீரங்கிகள், ஆயுதங்கள் பல நூற்றுக்கணக்கில்.

ஒன்றரை மாத இடைவெளிக்குப்பிறகு, 30.31801ல் பாஞ்சையின் மீது போர் தொடுக்கப்பட்டது. இதுவே இறுதிப் போராக இருக்கவேண்டும் என்ற அளவில் வேகமான உக்கிரமான போர். ஏறத்தாழ இரண்டு மாதங்கள் தொடர்ந்த போரில் நாள்தோறும் கும்பெனியாரது அணியில்தான் பயங்கரமான ஆள்சேதம். வாரந்தோறும் சென்னைக் கோட்டைக்குக் கிடைத்த