இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாவிரண் மயிலப்பண்= - -- 101
நீங்
- * * * * * * * * * * * * * வெற்றியைக் காண வேண்டும் என்ற இலட்சியத்தில், போரிட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்த நமக்கு, அந்தக் கோட்டையின் உட்பகுதியை முதன்முறையாகப் பார்த்த பொழுது, உள்ளத்தில் மிகுந்த ஆறுதல் ஏற்படுகிறது. இதனைக் கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சிகள்! தரை மட்டத்திற்குக் கீழே, ஆபத்துக் காலங்களில் பாதுகாப்பாக மூவாயிரம் வீரர்கள் தங்குவதற்கான வசதியுடன் அமைக்கப்பட்டு இருந்தது வியப்பை அளித்தது. எதிரிகளது துப்பாக்கி, பீரங்கி, குண்டுகளது தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்தக் கோட்டையின் பல பகுதிகளிலும் நரிப்பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தன. இந்தப் பள்ளங்களில் பயன்படுத்திய நீண்ட ஈட்டிகள் சரியான பலனைத் தந்தன. அந்தப் பகுதியை அடைந்த எந்த எதிரியும் உடனே அந்த ஈட்டிகளால் குத்திக் கொல்லப்படுவது உறுதி. அவர்கள் பதுங்கி இருக்கும்வரை எதிரிகள் யாரும் அவர்களை நெருங்க முடியாது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமாக தற்காப்பு நிலையை அமைத்த பொறியாளர்களைப் போற்றாமல் இருக்க முடியாது. இந்தக் கோட்டை மதில் மட்டும் இன்னும் சற்று உறுதியாக இருந்து, தற்காப்பிற்காகக் கூடுதலாகத் துப்பாக்கிகளையும் சனியன்கத்திகளையும் அவர்கள் பயன்படுத்தி இருந்ததால், நாம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்தக் கோட்டை வாசல்முன் காத்துக்கிடக்க நேரிட்டிருக்கும்”. எதிரியின் இணையற்ற பண்பைப் போற்றும் இந்த வரிகள் பாஞ்சைப் போரின் பரிணாமத்தை ஓரளவு உணர்த்துவதாக உள்ளது.
பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையைப் பரங்கியர் கைப்பற்றுவதற்கான போர் நடவடிக்ககைகளில் பரங்கியர் முனைந்து இருக்கிறபொழுது நமது கமுதிக் கோட்டையைக்
கும்பெனியாரிடமிருந்து பறிப்பதற்கு மறவர் சீமைக் கிளர்ச்சியாளர்களும் முயன்று வந்தனர். ஆனால், இவர்களது