உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 +.

மறவர் சீமை

தாக்குதல் அவர்களது தாக்குதலுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் சிறிய அளவிலானது என்றுதான் குறிப்பிடவேண்டும்.

கமுதிப் பேட்டையைத் தாக்கிய சித்திரங்குடி சேர்வைக்காரரது தலைமையில் ஆயிரம் பேர் கமுதிக் கோட்டையை 8.3.1801ம் தேதியன்று தாக்கியது ". இந்தத் தாக்குதலினால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. ஆதலால் அதற்கு வடக்கே புறப்பட்டுச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து தளபதி மில்லரும் புறப்பட்டார்." சித்திரங்குடி சேர்வைக்காரரைப் பிடிக்கும் பொறுப்பு அவனுக்கு கொடுக்கப்ட்டிருந்தது. அதேசமயம் சித்திரங்குடி சேர்வைக்காரரது தலைக்கு ஆயிரம் சக்கரம் அன்பளிப்பு என அறிவிக்கப்பட்டது என்றாலும், கிளர்ச்சிக்காரர்கள் கமுதிக் கோட்டையைத் தாக்கி வந்தனர். சித்திரங்குடி சேர்வைக்காரர் கமுதி முதுகளத்துார் இராமநாதபுரம் பகுதிகளில் மக்களைத் திரட்டுவதிலும் அவர்களது நாட்டுப்பற்று மிக்க நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், ஆங்காங்கு சென்று ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் கமுதிப் போரை முழுமையாக நடத்த முடியவில்லை. இன்னொரு காரணம் சிவகெங்கைச் சீமை மறவர்களும் அவர்களது ஆயுதங்களும் பாஞ்சாலங்குறிச்சிப் பாதுகாப்பு போரில் முனைந்து இருந்ததும் முக்கியமான காரணமாகும். கமுதிக் கோட்டைத் தாக்குதலில் சிவகெங்கைப் பிரதானி சின்னமருது சேர்வைக்காரர் அவரது மக்களும் காடல்குடி பாளையக்காரரும் ஈடுபட்டு இருந்தனர்.

கும்பெனி ஒற்றன் மார்ட்டின்ஸ், இராமநாதபுரத்தில் இருந்து நடத்திவந்த அணிகளுடன் கிளர்ச்சிக்காரர்களது நெருக்குதலை மிகவும் திறமையாகச் சமாளித்துப் போராடி வந்தான். அவர்களது உத்திகள் இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த ஓராயிரம் மறவர்களது உத்வேகமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களது உயிர்களைத் தற்காத்துக் கொள்ளும் தற்காப்புப் போராக மாறியது." இத்தகைய ూ UE இறுக்கமான நிலையில், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை வீழ்ந்த செய்தி, எதிர்பாராத

68. MDR vol. 1182/08.03.1801/p.p84-86. 69. Military Consultations vol. No.289/01.12.1801 p. 3870. 70. Military Consultations vop 289/01.12.1801.