பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

மாவீரன் மயிலப்பன் கைத்தறிக் கிடங்குகளும் சேகரம் பட்டறைகளும் நீண்டு வளர்ந்து பரந்து செல்லும் நெருப்பின் நாக்குகளினால் விழுங்கப்பட்டு சாம்பலாயின. பல ஆயிரம் பக்கோடா பணமதிப்புள்ள கைத்தறித் துணிகளும், தானியங்களும் அழிந்தன. சில விடுகளுக்கும் இதே கதி ஏற்பட்டன. தகவல் அறிந்த இராமநாதபுரம் கலெக்டர் அபிராமம் கிராமத்திற்கு வந்து அழிமானத்தைப் பார்வையிட்டு சென்னைக்கு அனுப்பிய அறிக்கையில்

"பயங்கரமான அழிமானத்தில சிக்கிய அபிராமம் கிராமத்தினை இன்று காலையில் பார்வையிட்டேன். முன்னுாற்று ஐம்பது வீடுகள் அழிந்து குட்டிச்சுவர்களாகக் காட்சியளிக்கின்றன. இரு குழந்தைகள், கால்நடைகள், விவசாயத்திற்கான வித்துக்கள், நூல் சிப்பங்கள் ஆகியனவும் அந்த நெருப்பில் வெந்து போயின. குடிமக்களது கையிருப்பில் இருந்த தானியங்களையும் கிளர்ச்சிக்காரர்கள் கொள்ளை கொண்டு சென்றுவிட்டனர். இத்தகைய கொடூரமான செயல்களை நேற்று முன்தினம் காமன்கோட்டையிலும், இராமநாதபுரம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிராமத்திலும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

குடிமக்களுக்கும் . கும்பெனியாருக்கும் இத்தகைய அழிமானங்களை ஏற்படுத்திய கிளர்ச்சிக்காரர்கள், கும்பெனியாருக்கு நடப்பு மாதத்திற்குச் செலுத்த வேண்டிய கிஸ்தித் தொகையையும் அவர்களே வசூலித்துச் சென்றுள்ளனர் என்ற விவரத்தையும் கும்பெனியாரிடம் அங்குள்ள மக்கள் பரிவுணர்வுடன் குதிரைகளுக்குத் தீனியும், கால்நடைகளுக்கு வைக்கோலும் வழங்கியதே கிளர்ச்சிக்காரர்களுடைய இந்த கொடுஞ்செயலுக்குக் காரணம் என்றும் இராமநாதபுரம் கலெக்டர் வரைந்து இருந்தார்.

75. Lushington's Report - 1801.