பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 C) B

மறவர் சீமை

முடிவு கண்டான் தளபதி அக்கினியூ. சிவகெங்கைச் சீமைப் பிரதானிகளுக்கு உதவும் கரங்களை உதவ விடாமல் தடுப்பது. அக்கினியூ தனது அறிக்கையை சென்னையில் உள்ள கும்பெனி கவர்னருக்கு அனுப்பி வைத்தான்,

சிவகெங்கைச் சீமையைச் சுற்றியுள்ள மேலுார் நாட்டுக்கள்ளர்கள், வடக்கேயுள்ள திண்டுக்கல், விருப்பாட்சி பாளையக்காரர்கள் ஆகியோர்களைச் சிவகெங்கைச் சீமைக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தடுப்பது அக்கினியூவின் பிரதானத் திட்டம். இன்னொரு சிறப்பான உத்தி. சிவகெங்கைச் சீமை பிரதானிகளிடமிருந்து தப்பிச்சென்று அறந்தாங்கிக் காட்டில் வாழும் சிவகெங்கைச் சீமை பட்டத்திற்குரிய படமாத்துர் ஒய்யாத்தேவர் என்ற கெளரி வல்லபத்தேவரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து, சிவகெங்கைச் சீமை அரசின் பொருத்தமான, நியாயமான வாரிசு எனச் சிவகெங்கையில் பகிரங்கப்படுத்துவதன் மூலம் பழமையில் நனைந்த ராஜவிசுவாசம், ஜாதி என்ற மெல்லிய இழையைப் பற்றியுள்ள பெரும்பாலான குடிமக்களை மருது சேர்வைக்காரர் அணியிலிருந்து பிரித்துவிடுவது இந்த இரு உத்திகளையும் நிறைவேற்றிவிட்டு சிவகெங்கை மீது படையெடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்பது அக்கினியூவின் தெளிவான திட்டம்.

இதனை விரைவாக நிறைவேற்றித் தமது படையெடுப்பை மேற்கொள்ள அக்கினியூ துடித்துக் கொண்டிருந்தான். இதன் முயற்சியாகக் கும்பெனியார் சிவகெங்கைச் சீமை மக்களுக்குப் பகிரங்க விளம்பரம் ஒன்றைப் பிரகடனப்படுத்தினான். இந்த அறிக்கையில்”

“கர்நாடக நவாப்பான முகமது அலியுடன் 12.7.1792ம் தேதி செய்து கொண்ட உடன்பாட்டின் மூலம் தென்னகத்தில் சிவகெங்கை உட்பட, அனைத்துப் பாளையக்காரர்களிடம் கப்பத் தொகையை நிர்ணயித்து வசூலிக்கும் உரிமையைப் பெற்று

77. Military Consultations' 1801. 7B.............. do......------------ 79...............do....................