பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–109

மாவீரன் மயிலப்பன்= - =

இருப்பதின் மூலம் சிவகெங்கையின் கப்பத் தொகையை பெறுவதற்கும் கும்பெனியார் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், நாலுகோட்டைப் பாளையத்தின் பணியாளர்களை வெள்ளை மருதுவும், சின்ன மருதுவும் மேற்கொண்டுள்ள சூழ்ச்சிகளினால் இந்த உரிமையும் அதிகாரமும் தடைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சீமையின் அரசியல் தலைமைப் பெண்ணாக இருந்த காரணத்தினால் இவர்கள், தங்களை இந்த அரசின் அமைச்சர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டு, அரசியார் மீதும் குடிமக்கள் மீதும் தங்களது அதிகாரப் பிடிப்பை நிலைநிறுத்தி வந்தனர்.

"நாலுகோட்டை பரம்பரையின் கடைசி வாரிசு இறந்த பிறகு வெள்ளை மருதுவும், சின்னமருதுவும் அதிகாரத்தினால் இந்தச் சீமை அரசியலை நடத்தி வந்தனர். இப்பொழுது கும்பெனியாரது படைகளுடன் நேரடியாக மோதல்களை ஏற்படுத்தி, சிவகெங்கைச் சீமையைத் தவறான திக்கில் அழிவிலும், நாசத்திலும் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். இளவரசியை மணந்து கொண்டதன் மூலம் சிவகெங்கை மன்னராகிய வேங்கன் பெரிய உடையார் தேவரும், தம்முடைய நலன்களை இவர்களுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.

"இவர்களை அடக்கி, ஒடுக்கிக் கும்பெனியாரது ஆதிக்கத்தை இங்கு நிலைநாட்ட சகல அதிகாரங்களையும் பெற்ற அலுவலராக தளபதி அக்கினியூ நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆதலால், சிவகெங்கைச் சீமையில் உள்ள குடிமக்கள் பிரிட்டிஷ் அரசின் மதிப்பையும், செல்வாக்கையும் குலைக்கும் வகையில், ஆயுதம் தாங்கினால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். சிவகெங்கைச் சீமை மக்கள் மருது சகோதரர்களது தொடர்பைத் தவிர்த்துத் தங்களது பாரம்பரிய ஜமீன்தாருக்கு விசுவாசங்கொண்டு தமது தொழில் முறைகளைக் கவனித்து வந்தால், அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு தக்க பாதுகாப்பு வழங்கும்”.