- - - 111 மாவீரன் மயிலப்பன்= - -- -
பெற்று வந்தான்." அடுத்து கும்பெனியாரது பிரதிநிதியான வில்லியம் பிளாக்பர்ன் புதுக்கோட்டையில் விஜயரகுநாத தொண்டமானை சந்தித்துப் பேசினான். கும்பெனியாருக்கு தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்ட இந்தக் கள்ளர், சிவகெங்கைக்கு எதிராக அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்." திருநெல்வேலித் தளபதி மக்களே எட்டையபுரம் சென்று எந்தக் காரணத்தினைக் கொண்டும் சிவகெங்கைப் பிரதானிகளுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரித்து வந்தார்.
இவ்விதம் கூட்டுக்கொள்ளை நடத்தச் செல்லும் திருடர்கள் கொள்ளையிடப் போகும் சீமானது வீட்டு நாயின் வாயைக் கட்டுவது போல, சிவகெங்கைச் சீமையைச் சுற்றியுள்ள பாளையக்காரர்களைக் கும்பெனியார் தங்களது ராஜதந்திரத்தினால், நிர்ப்பந்தமான கட்டுக்களைக் கொண்டு பிணைத்தனர்.
அடுத்த கட்டமாகத் தளபதி அக்கினியூ தனது போரினைச் சிவகெங்கைச் சீமையில் தொடங்கினான். முதலில் வடக்கேயுள்ள பிரான்மலை திருப்பத்துனர் கோட்டை அடுத்து அரண்மனை சிறுவயல், அப்புறம் காளையார்கோவில் கோட்டை, இந்த நடவடிக்கைகளை எல்லாம் நன்கு அறிந்த சிவகெங்கைப் பிரதானிகளைத், தங்களது நடவடிக்கைகளை விரைவு படுத்தியதுடன் காளையார்கோவில் போருக்கான ஆயத்தங்களில் முனைந்து நின்றனர். வழியெங்கும் அக்கினியூவின் படைகளைத் துவம்சம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தனர்.
82..........................” do...................... 83. Military consultation 1801.