பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறவர் சீமை

17. சூலை மாதத்துச் சூறாவளி

சிவகெங்கைச் சீமை நிலவரங்களை நன்கு அறிந்த மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரும், சித்திரங்குடி சேர்வைக்காரரும் முறையே இராமநாதபுரம், முதுகளத்தூர் பகுதிகளில் தொடர்ந்து பரங்கியரின் நிலைகளைத் தாக்குவதில் ஈடுபட்டனர். கும்பெனியார் சிவகெங்கைச் சீமை குடிமக்கள், சிவகெங்கைப் பிரதானிகளது தொடர்பைத்

துண்டித்துக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு" LD Тбілут தண்டனை வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த வாசகம் சிவகெங்கைச் சீமை மக்களையும் கொதிப்படையச் செய்தது. அதேசமயம் சிவகெங்கைப் பிரத்தானிகள்

கும்பெனியாருக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்று திரளவேண்டும் என திருச்சிராப்பள்ளிக் கோட்டையிலும், பூரீரங்கம் நகரிலும் வெளியிட்டிருந்த விளம்பரத்தின் நகல்" ஒன்று முதுகளத்தூர் சீமையின் பல பகுதிகளிலும் பொதுமக்களது பார்வைக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டதையும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிக்க அல்லது கேட்டு புதிய தெம்பு பெற்றனர்.

இதோ அந்த விளம்பர வாசகம்.

84. Governor Agnew proclamation dated 03.06.1807.