உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

மாவீரன் மயிலப்பன்==

யார் இந்த அறிவிப்பைப் பார்த்தாலும் அக்கறையுடன் படியுங்கள்.

“பிராமணர்களாக இருந்தாலும் சரி, அல்லது செட்டியார், வைசியர், சூத்திரர், முஸ்லீம்களாக இருந்தாலும் சரி” நாவலந்தீவு எனப்படும் இந்த நாட்டில் அனைத்து சமூகத்தினருக்கும் இந்த அறிவிப்புக் கொடுக்கப்ட்டிருந்தது.

“மாட்சிமை தாங்கிய நவாப் முகம்மது அலிகான் முட்டாள்தனமாகப் பரங்கிகளுக்கு இடங்கொடுத்துவிட்டு மூளியை போலாகிவிட்டார். பரங்கிகளும், அவருக்குச் செலுத்திவந்த விசுவாசத்திற்கு மாற்றமாகவும், மோசமாகவும் இந்த நாட்டு அரசைத் தமதாக்கிக் கொண்டனர்.

இங்குள்ள மக்களை நாயினும் கேடாக மதித்து, இந்த நாட்டில் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டி வருகின்றனர். உங்களிடையே ஒற்றுமையில்லை. நேய மனப்பான்மை இல்லை. பரங்கிகளது அந்தரங்கத்தை அறியாத நீங்கள், உங்களுக்குள் ஒத்துப் போகாமல் இந்த நாட்டை அவர்களிடத்தில் ஒப்புவித்து விட்டீர்கள். அவர்கள் அதிகாரம் செலுத்தும் சீமைகளில் குடிமக்களை ஆண்டிகளாக்கி விட்டனர். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அரிசி, வெல்லம் போல அருமையாகிவிட்டது. இந்த அவல நிலையை நேரடியாக அனுபவித்தாலும், இதனைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை.

“மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்தாலும் ஒருநாள் அவன் மரணமடைவது உறுதி. அவனது புகழும் சூரியனும்சந்திரனும் இருக்கும்வரை நிலைத்து இருப்பது நிச்சயம்.

“ஆதலால், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தங்களது பாரம்பரிய உரிமைகளை அனுபவித்தல் வேண்டும். குறிப்பாக ஆற்காட்டு சுபாவை, மாட்சிமை தங்கிய நவாபும், கர்நாடகத்தை