இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
115
மாவீரன் மயிலப்பன் -
“இந்த அறிவிப்பைப் படிக்கின்றவர்கள், கேள்விப்படுகின்றவர்கள், இதற்கு நகல் எடுத்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள். பொது இடங்களில் ஒட்டி பிரசித்தம் செய்யுங்கள்.
“இவ்விதம் செய்யாதவர்கள்- பஞ்சமா பாதகங்களைச் செய்த குற்றத்திற்கும் கங்கைக் கரையில் பசுவதை செய்த பாவத்திற்கும் உரிய தண்டனையைப் பெறுவார்களாக,
“இந்த வேண்டுகோளை மதிக்காத இஸ்லாமியர் விலக்கப்பட்ட பன்றியின் இரத்தத்தைப் பருகிய பாதகர்களாகப் போகட்டும்!
“இந்த அறிவிப்பை இங்கிருந்து அகற்றியவர்கள் பஞ்சமா பாதகங்களுக்கும் கூடுதலான பாவத்தைப் புரிந்தவர்களாகட்டும்! இதனைப் படிப்பவர்கள் இந்த வேண்டுகோள் நகலை வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இவண், பேரரசர்களுக்குப் பணியாளனும் இழிபிறப்பான பரங்கிகளுக்கு பரம விரோதியுமான மருது பாண்டியர்.