பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

மாவீரன் மயிலப்பன் - சித்திரங்குடி சேர்வைக்காரருக்கும் ஒத்துழைப்பு நல்குவதற்கும்

உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தத்தமது பாரம்பரிய உரிமைகளை அனுபவித்தல் வேண்டும்.

"பரங்கிகளது இரத்தக் கலப்பில்லாத அனைவரும் உடனே ஒற்றுமைப்படுங்கள்"

"மீசை வைத்துள்ள அனைத்து ஆண் மக்களும், ஆயுதம் தாங்கிப் போராடும் வல்லமை பெற்ற அனைவரும், தங்களது ஆண்மைத் திறமையை முதன்முறையாக நிரூபித்துக் காட்டுங்கள்".

அந்த வேண்டுகோளில் இடம்பெற்று இருந்த இந்த வாசகங்கள் அவர்களது இதயங்களில் இடம் பிடித்துக் கொண்டன. போரெனில் புகழும், புனைகழல் மறவர்கள் அல்லவா? மறவர் சீமையின் மானத்தைக் காக்க, மூத்த குடிமகனான சேதுபதி மன்னரைச் சிறையினின்றும் விடுவிக்க, புதிய ஆளவந்தார்களான கும்பெனியாரது கொட்டத்தை அடக்கி அவர்களை மறவர் சீமையில் இருந்து துரத்தியடிக்க இதுவரை மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடாது ஒதுங்கி இருந்த மக்களும் துணிந்து முன்வந்தனர். சித்திரங்குடி சேர்வைக்காரரது அணியில் திரண்டனர். பரமக்குடி, பார்த்திபனுர், உளக்குடி, நயினார்கோவில் ஆகிய ஊர்களில் அறுவடைக்கு முதிர்ச்சி பெற்று நின்ற கதிர்மணிகள் காணாமல் மறைந்துவிட்டன. அல்லது நெருப்பு வைத்து அழிக்கப்பட்டன, இதன்மூலம் கும்பெனியார்களுக்கு குடிமக்கள் செலுத்த வேண்டிய "கிஸ்தி" கிடைக்காமல் போய்விடும் அல்லவா?

கிளர்ச்சிக்காரர்களுடன் முதுகளத்துார் சென்ற சித்திரங்குடி சேர்வைக்காரரது மனத்தில் கும்பெனியாரது கோரச் செயல்கள் பற்றிய சிந்தனை அசுரவடிவாக உருவெடுத்தது. ஏராளமாக ஆயுதங்கள், முதுகளத்துர் கச்சேரியில் சேமித்து வைக்கப்ட்டு இருப்பதாக தகவல், அவருக்கு கிடைத்ததுதான் தாமதம், அவரது அணியினரும்

87. Military Consultations 1801.