பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

வரலாற்றுப் பின்னணி

பதினான்காம் நூாற்றாண்டின் தொடக்கம், தமிழக வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தைஏற்படுத்தியது. சங்ககாலம் முதல் தமிழகத்தின் முடியுடை மூவேந்தர்களில் ஒருவராக விளங்கிய பாண்டியர்கள் வீழ்ச்சியுற்றனர். தில்லி சுல்த்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியில் அவரது பதினேழு மாகாணங்களில் ஒன்றாகப் பாண்டிய நாடும் இணைக்கப்பட்டது. அடுத்து பாண்டிய நாடு விஜய நகரப் பேரரசின் பகுதியாக கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்தக் கால கட்டத்தில் தொல்குடியினரான பாண்டியர்கள் இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, தென்காசிப் பகுதிகளில் வலிமையும், வளமையும் குன்றிச் சாதாரண பாளையக்காரர்களைப் போல் வாழ்ந்திருந்து வரலாற்றிலினின்றும் மறைந்து விட்டனர். பாண்டியர்களது ஆட்சியில் சிறப்பான பணிகளில் இருந்த மாவலி வானாதிராயர்களும், சோழர்களது இராணுவச் சேவைகளிலிருந்த செம்பி நாட்டு மறவர்களும் தன்னாட்சி நிலை பெற்றனர்.

பாண்டிய நாட்டின் கீழைக்கடற்கரைப் பகுதியின் மன்னர்களாகத் தங்களை