பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 மாவீரன் மயிலப்பன் * -

மீது சுற்றிவந்து சேதுநாடு முழுவதும் இரவுபகல் என்று பாராமல் மறக்குடி மக்களைத் திரட்டியதைப் போன்று, சித்திரங்குடி சேர்வைக்காரரும் இப்பொழுது அதே வீர உணர்வுடன் ராஜ விசுவாசத்துடன் பிறந்த மண்ணின் மீது கொண்ட மாளாத பாசத்தினால் பசி, தாகம், ஊன், உறக்கம் அனைத்தையும் மறந்து மந்திர தந்திர மகேந்திர ஜாலத்தில் வல்ல மாயாவியைப் போல மூன்று ஆண்டுகளாக அலைந்து திரிந்து வந்தார். அவரது மூச்சும், பேச்சும் ஒரே இலக்கை-கும்பெனியார் எதிர்ப்பைக் கொண்டதாக இருந்தது. குடிமக்கள் அனைவரும் கும்பெனியாருக்கு எதிராக ஒரே தலைமையில் கிளர்ந்து எழுந்து போராடினர். கும்பெனியாரையும் அவர்களது குள்ளநரித்தந்திரத்தையும் வெற்றிகொண்டு அழித்துவிட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை குடிமக்களிடம் ஆழமாக ஏற்படுத்திவிட்டால் போதுமானது என்பது அவரது திட்டம்."

அடுத்து சித்திரங்குடி சேர்வைக்காரரது அணியொன்று மேற்கே திருச்சுழியில் பகுதிக்கு விரைந்தது. அங்கு ஆயத்த நிலையில் இருந்து கும்பெனி வீரர்களையும் சேவகர்களையும் மோதினர். திருச்சுழியில் உடையார்பட்டி, தமிழ்பாடி ஆகிய ஊர்களில் இந்த மோதல்கள் நிகழ்ந்தன. இந்தத் தாக்குதலினால் மிகவும் பாதிக்கப்பட்ட பழமானேரி அமில்தார் இராமநாதபுரம் கலெக்டரிடம் அவசர உதவி கோரினார்." அப்பொழுது கும்பெனியாரது துருப்புகள் தளபதி ஷெப்பேர்டு தலைமையில் காடல்குடி, குளத்துார், பாளையங்களில் கிளர்ச்சிக்காரர்களை அடக்குவதில் ஈடுபட்டு இருந்தால் பழமானேரிக்கு உதவிப் படைகள் வரவில்லை." என்றாலும், கிளர்ச்சிக்காரர்களது கண்ணோட்டம் கமுதிக் கோட்டையின் மீது சென்றது.

முதுகளத்துார் பகுதியில் சித்திரங்குடி சேர்வைக்காரர் தலைமையில் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த விடுதலை இயக்கத்தின் பகுதியாக கமுதிக்கோட்டை ஏற்கனவே இருமுறை தாக்கப்பட்டது. கிளர்ச்சிக்காரர்களது தரப்பில் மிகுந்த

89. பழனேரி,அமில்தார் அறிக்கை. 90. Military Consultations 1801. 91....................... do.....................