பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 மாவீரன் மயிலப்பன் - -

தொண்டமான்களாகிய கழிசடைகள்! மேலும், வெற்றி என்பது காற்றாடிகளில் பொருத்தியுள்ள கோழி உருவங்கள். அவை காற்றின் திசையை மாறி மாறிக் காட்டுவதுபோல பரங்கியரே பாரதத்தைக் காலமெல்லாம் ஆட்டிப்படைத்து விடுவார்களா?

அந்தப் பரங்கியரைப் பொருதி அழித்து வரலாறு படைக்க முயன்ற மறவர் சீமை வல்லுநர்கள். தாயைவிட்டுப் பிரிந்த கோழிக் குஞ்சுகளாகவல்லவா சிதறிக் கிடந்தனர். மரணமுற்ற அவர்களது கரங்கள், வலுவுடன் பற்றி இருந்த கொடுவாளும் நெடுவேலும், அவர்கள் இறக்கும்போது அவர்களது இதயங்களில் பொருந்தி நின்ற வீரபிரதிக்ஞையை வெளியிடுவது போல காட்சியளித்தது.

கமுதி கோட்டை மேட்டிலிருந்து வடகிழக்கே தவசிக்குறிச்சி வரை பரந்து காணப்பட்ட பெருவெளியில் மறவர் சீமை வீரர்கள் வழங்கிய இந்த உயிர் காணிக்கைகள் சிறு சிறு பிணக் குவியல்களாக ஆங்காங்கு காணப்பட்டன என்றாலும், இந்தப் போரில் எத்தனைபேர் தியாகிகள் ஆனார்கள் என்பதற்கான சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள ஒரே ஆவணத்தின்படி" கோட்டை முற்றுகைப்போரை பொறுப்பேற்று நடத்திய ஏழு சேர்வைக்காரர்களும் அபிராமம் வழியில் பின்வாங்கிச் சென்றபோது போரிட்ட போராளிகள் நானுறு பேர் மட்டும் நமது வீர வணக்கத்திற்குரிய தியாகிகள் என்று தெரிய வருகிறது.

கமுதிப் போரில் எஞ்சிய சிறு அணியினர், சிறிதும் சளைக்காமல், அவர்களது முந்தைய திட்டப்படி இராமநாதபுரம் கோட்டையைத் தாக்குவது என்ற முடிவை செயல்படுத்த முனைந்தனர். சிக்கல் வரை இவர்களைத் தொடர்ந்து வந்த கொலைகாரன் மில்லரது கூலிப்படையினைத் துரத்தியடித்துவிட்டு இராமநாதபுரம் கோட்டையை நோக்கி வந்தனர். கர்னல் மில்லரும் அவனது கூலிப்படையினரும் அவர்களைச் சிக்கல் வரை பின்தொடர்ந்து சென்று இழப்புகளை ஏற்படுத்தினர். ஒடும் முயல்களைத் துரத்துவது

94. Military Consultation's vol 256 pp 6854-56.