124
- மறவர் சீமை
ஒநாய்க்கு எளிதுதானே!
மயிலப்பன் சேர்வைக்காரரும், அவரது கூட்டாளிகளும் சிக்கலில் இருந்து பரமக்குடிக்கு எதிர்க்கரையில் கிழக்கே அமைந்துள்ள எமனேசுவரம் வந்து சேர்ந்த பொழுது ஊர் அடங்கி விட்டது. அவர்கள் கன்னியப்பபிள்ளை மடத்தில் வழங்கிய கம்புமாவில் தாயரிக்கப்பட்ட அடையை மென்று தின்றனர். அவர்களது உள்ளம்போல வயிறு நிறையவில்லை. என்றாலும், அந்த அடையைத் தின்றபிறகு அவர்களது குதிரைகளுக்கு கொள்ளு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டுச் சேர்வைக்காரரும் நான்கு வீரர்கள் மட்டும் வைகையாற்று மணலுக்குச் சென்று துண்டுகளை விரித்துப் படுத்தனர். மற்றவர்கள் மடத்திலேயே தங்கிக் கொண்டனர்.
நடுச்சாம நேரம். கிழககு வானில் பின்னிலவு எழுந்து வந்து கொண்டிருந்தது. உறக்கம் கொள்ளாத மயிலப்பன் சேர்வைக்காரரது சிந்தனையில் எத்தனையோ எண்ணங்கள். சந்திரனது மங்கலான ஒளியில் காட்சிதரும் மரங்கள், வீடுகள் ஆகியவைகளின் தெளிவற்ற உருவங்களைப்போல.
தான்பிறந்த மண்ணிலேயே முளைத்த ஆனை நெருஞ்சி முட்களைப்போல கமுதிப்போரில் சித்திரங்குடி நாட்டார்கள் ஆப்பனுர் மறவர்களுடன் இணைந்து கும்பெனிக்கு ஆதரவாகச் செயல்பட்டது. போரின் உக்கிரமான நிலையில் கும்பெனியின் உதவிக்கு வந்த இராமநாதபுரம் மறவர் அணியைக் கண்டு கிளர்ச்சிக்காரர்கள் அவர்களை எதிர்த்துப் போரிடத் தயக்கம் காட்டியது. ஒரு சில நிமிடங்கள் நீடித்த கிளர்ச்சிக்காரர்களது தயக்கத்தால் போரின் கதி மாறியது.
வெற்றியை எதிர்பார்த்து இருந்த வேளையில் தாங்க முடியாத பெருந்தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளாக நாளையும் கிழமையையும் மறந்து பிறந்த மண்ணின் மீது கொண்ட பாசத்தையும்