125
மாவீரன் மயிலப்பன்
மறவர் சீமை மக்களது மூத்தகுடிகளான சேதுபதி மன்னர் மீது கொண்ட விசுவாசமும் இரண்டு கண்களாகக் கொண்டு செயல்பட்டு, மக்களைத் திரட்டி மகத்தான இலட்சிய நோக்கு வழிநடத்திய தன்னலமற்ற பணிக்கு கிடைத்த பரிசு இதுதானா?
மூன்றாண்டுகளாக மனைவியின் முகத்தைக் கூடப்பார்த்து ஆறுதல் சொல்ல முடியாமல் சீமையெங்கும் கண்மாய், வாய்க்கால், காடு, மேடு என அலைந்து கொண்டே காலத்தைக் கழிக்கும் எனக்கு....
இப்படி எத்தனையோ சிந்தனைகள் ஒன்றைத் தொட்டு ஒன்றாக ஊர்ந்து வந்து உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டிருந்தன. காலை நேரத் தொழுகைக்காக அண்மையில இருந்த பள்ளிவாசலில் இருந்து வந்த பாங்கு ஒலி சேர்வைக்காரரது சிந்தனையைக் கலைத்து காலைநேரம் புலருவதை அறிவுறுத்தியது.
அடுத்தடுத்து நன்கு உறக்கிக் கொண்டிருந்த தனது தோழர்களை உறக்கம் தெளியுமாறு செய்து கன்னியப்ப பிள்ளை மடத்திற்குச் சென்றார். சிறிது நேரத்தில் குதிரைகளையும் உஷார்படுத்தி அடுத்த பயணத்திற்கு ஆயத்தம் செய்தனர்.