பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

=மறவர் சீமை

18. காளையார் கோவில் போர்

இந்த அணி இளையான்குடி, மங்கலம் வழியாக காளையார்கோவில் சென்றடைந்தபொழுது உச்சிவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. வெயிலின் கொடுமையைப் பொருட்படுத்தாமல் காளையார்கோவில் கோட்டைக்கு வெளியில் நூற்றுக்கணக்கான சிவகெங்கைக் கிளர்ச்சிக்காரர்கள் கார்காலத்துச் சிற்றெறும்புக் கூட்டம் போல மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மயிலப்பன் சேர்வைக்காரருக்கு மிகுந்த தெம்பை அளித்தது. அன்று காலைவரை, அவரை ஆட்கொண்டிருந்த குழப்பமான சிந்தனைகள்

பறந்தோடி விட்டன. சிவகெங்கைக் கிளர்ச்சிக்காரர்கள், விரைவில் காளையார்கோவில் கோட்டையில்

கும்பெனியார் தாக்குதலை முறியடிக்கும் வகையில் பலவிதமான முன்னேற்பாடுகளில் முனைந்து இருந்தனர்.

கொத்தளங்களில் ஆயுதக் குவிப்பு கோட்டைச் சுவர்களைச் செப்பனிடுதல், பீரங்கிக்காரர்களுக்கான கருமருந்து தயாரித்தல், சோழபுரம், ஒக்கூர் பாசறையில் இருந்து கிழக்கு நோக்கி வரும் கும்பெனிப் L 1 6 нl Biн бiту ЕТ அழகாபுரி, முத்துார்.