பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

மாவீரன் மயிலப்பன்: - - -

கொல்லங்குடி, கீரனுர் ஆகிய ஊர்களில் வழிமறித்து அழிப்பதற்கான ஏற்பாடுகளில் சிவகெங்கைச் சீமை கிளர்ச்சிக்காரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அமைதியும், ஆன்மீகச் சிந்தனைகளையும் பின்னணியாகக் கொண்டிருந்த அந்த ஊரில் பரபரப்பாகவும், அவசர கதியிலும் காணப்பட்டது. 25.06.1772ல் சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவரை, இதே ஊரில் போரில் கொன்ற கும்பெனியாரை, இப்பொழுது நடக்கவிருக்கும் போரில் அவர்களது ஆணவத்தை அழித்து மறவர் சீமையின் மானத்தை நிலைநாட்டி விடலாம் என்ற நம்பிக்கை அவர்களது நடவடிக்கைகளில் பிரதிபலித்தது.

மயிலப்பன் சேர்வைக்காரர் அணியினர் கோவிலுக்குச் சென்று காளைநாத சுவாமியைத் தரிசித்தனர். பின்னர் உடன்வந்தவர்களை ஓய்வு கொள்ளச் செய்து விட்டு மயிலப்பன் சேர்வைக்காரர் மட்டும் கோயிலின் தெற்குப் பகுதியில் நீராழியை அடுத்த மண்டபத்திற்கு சென்று அங்கு இருந்த மருது சேர்வைக்காரர்களைச் சந்தித்தார். கமுதிக் கோட்டைப் போரில் வெற்றி நழுவிச் சென்றதையும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் மருது சேர்வைக்காரர்களிடம் மயிலப்பன் விவரமாக எடுத்துரைத்தார். அவைகளை மிகுந்த சிரத்தையுடன் கேட்டறிந்த பிறகு இன்னும் இரண்டொரு வாரங்களில் கும்பெனியார் காளையார்கோவிலில் அவர்களது முழு பலத்தையும் பயன்படுத்தி மறவர் சீமைக் கிளர்ச்சியை நசுக்கத் திட்டமிட்டு இருப்பதையும் தெரிவித்த சின்னமருது சேர்வைக்காரர் மேலும் தொடர்ந்து சொன்னார்.

"இன்னும் சில நாட்களில் இங்கு நடக்க இருப்பது இரண்டாவது பாரதப் போர். இந்த காளையார் கோவில் வரலாற்றில், இது தமிழ்நாட்டில் குருக்ஷேத்திரமாக விளங்கப் போகிறது. அதர்மத்தை, ஏகாதிபத்தியவாதிகளின் அக்கிரமத்தை, அழித்து ஒரு முடிவிற்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், நாம் பிறந்து வளர்ந்த நம்மைச் சுமந்து வருகின்ற இந்தப் புனித மண்ணுக்கு நாம் செலுத்தவேண்டிய