பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= 3.

நாட்டரசன்கோட்டை ஆகிய ஊர்களில் பொன்றாத புகழ் பெற்றனர். இக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புக் கட்டளைகள், ஆண்டு திருவிழாக்கள் ஆகியவை முறையாக நடைபெறுவதற்கு உதவும் வகையில் தகுந்த வருவாய்களை அளிக்க வல்ல பல ஊர்களையும், இந்தக் கோயில்களின் கைங்கரியங்களுக்காகவே சர்வமான்யமாக வழங்கியுள்ளனர்.

இத்தகைய சீரும், சிறப்புமிக்க சேதுபதி மன்னரது நல்லாட்சி மேலும் தொடர முடியாதபடி கி.பி.1795-ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரது தலையீடு ஏற்பட்டது. அப்பொழுது மன்னராக இருந்த முத்து ராமலிங்க விசயரகுநாத சேதுபதி என்ற இளம் மன்னரைத் தங்களது சூழ்ச்சியினால் கைது செய்து, திருச்சிக் கோட்டையில் அடைத்து விட்டு, மறவர் சீமையின் ஆட்சியை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனியார் ஏற்றனர். அப்பொழுது, தென்னகம் முழுவதற்கும் ஆட்சியாளராக இருந்த கர்நாடக நவாப் வாலாஜா முகமது அலியின் முகவர்களாக மதுரை, நெல்லை சீமைகளின் குடிகளிடமிருந்து தீர்வை வசூல் செய்யும் அதிகாரம் பெற்றிருந்த வெள்ளையர்களுக்கு இச்சேதுபதி மன்னர் மறவர் சீமையில் வணிகம் நடத்த வழி கொடுக்காததுடன், அவர்களது ஏகபோகக் கைத்தறிக் கொள்முதலையும் அனுமதிக்கவில்லை. ஆகவே மன்னரைச் சிறைப்படுத்துவதற்கு இவை அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

மன்னரைச் சிறையிலிட்டபின், ஆங்கிலக் கம்பெனியாரே மறவர் சீமையின் நிர்வாகத்தை மேற்கொண்டு நடத்தினர். குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். மன்னரில்லாது மயங்கிய இக்குடிகளுக்கு வழிகாட்ட முன்வந்தார் இளைஞர் ஒருவர். இவர் மறவர் சீமையின் தென்பகுதியான ஆப்பனுர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் விரைவிலேயே ஒரு படை