உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

- - - :மறவர் சீமை

இந்த வினாக்களை தமக்குள்ளே எழுப்பிக் கொண்ட மயிலப்பன் சேர்வைக்காரர், அவைகளுக்கு விடை காண முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்.

நாட்கள் விரைவாக հՋնգ நழுவி மறைந்தன. காளையார்கோவில் கோட்டைப் போர் முடிந்து அதற்குள்ளாக மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. சூடியூர் சத்திரத்தில் தொடர்ந்து நிலைத்து இருக்க முடியாத மயிலப்பன் சேர்வைக்காரர் கண்மாய்க்கரை வாய்க்கால், வரப்பு. காடு, மேடு, இரவு, பகல் என அவர் இந்த மூன்று மாதங்களில் முதுகளத்துார், கமுதி, சாயல்குடி பகுதிகளில் இரவும் பகலும் சுற்றிச் சுற்றி வந்தார்.

தேசாந்திரி, சேதுயாத்திரைப்பயணி, மறமானியம் கிராமங்களில் பாகவதம் படிக்கும் பெளராணிகர் ஆகியோரைப் போன்று மாற்று உடைகளில்,

ஆம்! மாற்றுடையில்தான் கும்பெனியாரது ஏவல் நாய்களின் கண்களில் படாமல் இருப்பதற்காக! மறவர் சீமையின் விடுதலை இயக்க சூத்திரதாரியாக விளங்கிய மயிலப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கும்பெனியாரிடம் ஒப்படைத்தால் ஓராயிரம் வெள்ளிப்பணம் என தளபதி அக்கினியூ விளம்பரப்படுத்தி இருந்தான். இந்த இழி செயலை முடித்து அந்தக் கைக்கூலியைப் பெறுவதற்கும் சிலர் கச்சை கட்டிக் கொண்டு திரிந்தனர். அமுதத்தை அளித்த கடல்தானே ஆலகால விஷத்தையும் அளித்தது.

அப்பொழுது மயிலப்பன் சேர்வைக்காரருக்கு ஒருநாள் பொழுதை ஒரு இடத்தில் கழிப்பது என்பது ஒரு யுகம், போலத் தோன்றியது. இப்படியே கொலை, கொள்ளை நடத்திய குற்றவாளியைப் போல எத்தனை நாட்களுக்கு ஒளிந்து பயந்து மறைந்து வாழ்வது? இந்த வாழ்க்கை தேவைதானா? இந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளித்து இயல்பு நிலைக்கு