பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 மாவீரன் மயிலப்பன் - - - -

வருவது? இது முடியுமா? மயிலப்பன் சேர்வைக்காரரது சிந்தனை இப்படியே வளர்ந்து கொண்டே வந்தன. இருண்ட வானில் திரண்டு நின்று ஒளிரும் விண்மீன்கள் எத்தனை என விரல்விட்டு எண்ணிவிட முடியுமா? இதற்கிடையில் விடுதலைஇயக்கத் தலைவர்கள் கும்பெனியாரால் பிடிக்கப்பட்டு கொடுரமான முறையில் கொல்லப்பட்ட செய்திகளும் ஆங்காங்கு மக்கள் பேசிக் கொண்டு இருந்ததும் அவரது காதுகளில் விழுந்தன.

காளையார்கோவில் போரின் தோல்வியைத் தாங்கியவாறு, அரண்மனை சிறுவயல், ஒக்கூர் காடுகளில் அலைந்து திரிந்த சிவகெங்கைப் பிரதானிகள் மருது பாண்டியரைச் சுட்டுக் காயப்படுத்தி கைது செய்த கும்பெனிக்கூலிகள் அவர்களை 24.10.1801ம் தேதியன்று திருப்பத்துர் கோட்டையில் தூக்கில் போட்டு தியாகிகளாக்கினர்.

அவர்களது ஆதரவாளர்கள், உறவினர்கள் ஆகியோரையும் ஆங்காங்கே அவர்களைப் பிடித்த இடங்களிலேயே தூக்கிலிட்டு கொன்றனர். இவர்களது உதவிக்கு ஓடி வந்த பாஞ்சாலங்குறிச்சி ஊமை குமாரசுவாமியையும், பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டு சென்று அங்குள்ள இடிந்த கோட்டைவாயிலில் வைத்துச சிரச் சேரம் செய்தனர்.

கும்பெனியாருக்கு எதிராக இராமநாதபுரம், சிவகெங்கை சீமைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுப்பற்றுடனும் அந்நிய எதிர்ப்பு உந்துதலுடனும் ஆவேசமாக, அணிதிரண்டு போராடிய அனைத்து மறவர்களுமே வீரமரணம் எய்திவிட்டனர். ஒரு சிலர் கும்பெனியாரது இராமநாதபுரம், பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் முன்னணித் தலைவர்கள் இருவர் மட்டுமே கும்பெனியார் கைகளில் அகப்படாமல் இருந்து வந்தனர். அவர்களில் ஒருவரான மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரை சாயல்குடியை அடுத்த