பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 O. -

- = மறவா சீமை

குதிரைமொழிக் காட்டில் இருப்பதை அறிந்து அவரைச் சுற்றி சூழ்ந்து பிடித்து இராமநாதபுரம் கோட்டைச் சிறையில்அடைத்தனர்.

இப்பொழுது எஞ்சி இருப்பது மயிலப்பன் சேர்வைக்காரர் மட்டுமே!

சேதுபதி மன்னரது விசுவாசமிக்க இந்தத் தளபதிக்கு மறவர் சீமை எங்கும் எவ்வளவு செல்வாக்கு இருந்தது? அவரது கம்பீரமான தோற்றத்திலும், எளிய இனிய பேச்சிலும் மயங்கிய இளைஞர்களது அணிகள் எங்கே? கரையில் எரியப்பட்ட கண்மாய்க் கெளுத்தி மீன்போல அவரது சுவாசம் படபடத்தது.

என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? இதே வினாக்கள் மாறி மாறி அவரது உள்ளத்தில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது. கடுகுசந்தை கிராமத்தின் முகப்பில் தேசாந்திரி உடையில் அமர்ந்து துரத்தில் உள்ள காட்டுப் பாதையை நோக்கியவாறு இருந்தார்.

அண்மைக்காலத்தில் பெய்த அடைமழை காரணமாக துளிர்ந்து தழைத்த பசுமையான தோற்றத்தில் காட்டுவாகை, வேலா, வேம்பு மரங்கள் காட்சி அளித்தன. வறண்டும் காய்ந்தும் கிடந்த தரிசு நிலங்களையும் பசுமை வண்ணம் தீட்டப்பட்டதுபோல ஆதாளை, அவுரி, தும்பை ஆடாதொடை செடிகள் பூவும் கொத்துமாகப் பொலிந்து அழகு சேர்த்தன. விரைவில் அவை பெரிதாகிக் காய்த்துப் பழுத்துக் கன்னிப் பெண்ணைப்போல காட்சி அளிக்கும் அல்லவா!

இயற்கை எதிர்காலத்தை நோக்கி விரைந்து செல்கிறது. ஆனால் மனித மனம் மட்டும் கடந்த காலத்தில் குத்திட்டு நிற்கிறது. மயிலப்பன் சேர்வைக்காரரது சிந்தனைமட்டும் வரலாறு படைத்த மறவர் சீமை விடுதலை இயக்க நிகழ்ச்சிகளில் ஊன்றி நின்றது. ஆனால், அதேசமயம் பழமையை மறந்து அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இதுவரை மக்களுக்காகச்