பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறவர் சீமை

20. ஆங்கிலேயர்களின் அட்டுழியம்

காளையார்கோவில் கோட்டைப் போரின் முடிவு கும்பெனியார் எதிர்பாராத நிலையில் மிகப் பெரிய வெற்றியாக அமைந்துவிட்டது. தென்பாண்டி நாட்டில் அவர்களது அதிகார மமதைக்கு எதிராக, அவர்களது ஆணவத்தை தொலைக்கும் வகையில் எந்த நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. வடக்கே திண்டுக்கல் சீமையை அடுத்து சிவகெங்கைச் சீமை, சேதுபதிச் சீமை, திருநெல்வேலிச் சீமை ஆகிய தென்பாண்டி நாட்டு அந்நிய எதிர்ப்புப் பாசறைகளில் இருந்து கும்பெனியாருக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பு கூட எழுவதற்கு இயலாத சூழ்நிலை.

ஆதலால், கும்பெனியார் இந்தப் பகுதிகளில் மீண்டும் அவர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு மிகவும் தீவிரமான நடவடிக்கைகளில் முழு மூச்சுடன் இறங்கினர். முதலாவதாக இந்தப் பகுதிகளில் ஆங்காங்கு முந்தைய பாளையக்காரர்களாளும், சிவகெங்கை மன்னர், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகியோரது பாதுகாப்பு அரண்களாக விளங்கிய கோட்டைகளையும், கொத்தளங்களையும், அழித்து ஒழிப்பது