பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

மாவீரன் மயிலப்பன்

என்பது.

இரண்டாவதாக இந்தப் பாயைக்காரர்கள் மற்றும் மன்னர்களது குடிமக்களது உயிர்க் கருவியாக விளங்கிய வளரி, வாள், ஈட்டி, குத்து ஈட்டி, வேல் நாட்டுத் துப்பாக்கி ஆகிய ஆயுதங்களைப் பறித்து சேகரித்து அழிப்பது.

இறுதியாக இதுவரை, கி.பி.1799 முதல் 1801 வரை கும்பெனியாருக்கு எதிராக நாடு தழுவிய முறையில் மக்கள் கிளர்ச்சிகளை ஊக்குவித்துக் கும்பெனியாருடனும் அவர்களது விசுவாமிக்க ஊழியர்களுடனும் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு கும்பெனியாரது உயிருக்கும் உடமைகளுக்கும் அழிமானம், ஏற்படுத்தி முழுமையாக தங்களது மீட்சியில் தோல்வியுற்றுத் தன்னந்தனியாகத் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மீனங்குடி முத்துக்கருப்பத் தேவர் மற்றும் சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் ஆகியோர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும் என்பது.

இந்த இலக்குகளை எய்துவதற்காக அன்றைய கும்பெனியாரது நிர்வாகம் முழுமூச்சுடன் செயல்பட்டது. இராமநாதபுரம் சீமையிலுள்ள சிறப்பான கோட்டைகள்.

"அனுமந்தக்குடி, ஆறுமுகம்கோட்டை, இராமநாதபுரம் கோட்டை, காமன்கோட்டை, திருச்சுழி, கமுதிக்கோட்டை முதல்நாடு கோட்டை, முஷ்டக்குரிச்சிக்கோட்டை பந்தல்குடிக்கோட்டை ஆகியவைகளின் சுற்று மதில்களும், கொத்தளங்களும், இடிக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டன. இதனைப்போன்றே சிவகெங்கைச் சீமையில் உள்ள பிரான்மலைக்கோட்டை, திருப்பத்துளர் கோட்டை, காளையார்கோவில் கோட்டை, உருவாட்டிக் கோட்டை, மானாமதுரைக் கோட்டை ஆகியவைகளும் தகர்த்தெறியப்பட்டன.

95. Madurai District Recerds vol - 1146 (01.09.1803) p-34