- # - 147 மாவீரன் மயிலப்பன் -
இந்த ஆயுதங்களை கும்பெனியாருக்கு எதிராக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு மக்களுக்குக் கிட்டுவதாக இல்லை என்பது வேதனை தருவதாகும். இங்ங்ணம் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஆயுதங்கள் அனைத்தும் இராமநாதபுரம் மதுரை பாளையங்கோட்டை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் நிலைகொண்டிருந்த கும்பெனியாரது இராணுவப் பாசறைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்த பொறுப்பான இராணுவ அலுவலர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டனர்"
"திருநெல்வேலிச் சீமையிலுள்ள கோட்டைகளுக்கும் ஏற்பட்ட அழிமானங்கள் பற்றிய செய்திகள் கும்பெனியாரது ஆவணங்களில் காணப்பெறுகின்றன. குறிப்பாக பிரம்மதேசம் கங்கைகொண்டான், சங்கரநயினார் கோவில், ஆழ்வார் திருநகரி களக்காடு பகுதிகளில் இருந்த 28 கோட்டைகள் அழிக்கப்பட்டதற்கும் குறிப்பாக பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டையை எந்தக் காரணத்தைக் கொண்டும், எப்பொழுதும் யாரும் அதனை மீண்டும் பரங்கியருக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும் அந்த கோட்டையின் பாளையக்காரர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அந்த கோட்டையை இடித்துக் கோட்டை இருந்த பகுதியில் கழுதைகளை ஏரில் பூட்டி எள்ளை விதைத்து எருக்கலைச் செடியை நட்டதற்கும் விவரங்கள் உள்ளன. இந்த கோட்டையை இடித்து அழிப்பதற்கு அறுநூறு ஆட்களை நியமித்து இருந்தனர். அரணை அடையாளம் தெரியாதவாறு அழித்துப் போட்டதுடன் அந்தப் பெயரை அலுவலக ஆவணங்களில் இருந்து அகற்றினர்.
"மேலும் மதுரைச் சீமை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகப் பதிவுகளில் காணப்பெறவில்லை. என்றாலும் அந்த சீமையின் பிரதான நகரங்களான வத்தலக்குண்டு, நத்தம், பெரியகுளம், வேடசந்தூர், பழநி, தாராபுரம் தாசில்தார்கள் எராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்து அழித்த செய்தி, கும்பெனியாரது
98. Madurai District Records vol. 1178 (A) 17.05.1802 p. 354 gbid p (1142). 99......................... do.........................vol 1140 (28.05.1802). 100.........................do.........................vol 128 p39, 42,61, 68.