பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

=மறவர் சீமை

அணியின் தலைவராக, சேர்வைக்காரராகப் பதவி உயர்வு பெற்றார். இதனால் மக்கள் இவரைச் சித்திரங்குடி சேர்வைக்காரர் என்ற காரணப் பெயரால் அழைத்து வந்தனர். இன்னும் சிலர் இவரது பொது நலப்பணியில் இருந்த ஆர்வத்தைக் கண்டு இந்தப் பெயர் அவரின் இயற்பெயரல்ல. இவர் முதலில் சேதுபதி மன்னரைத் திருச்சிக் கோட்டையிலிருந்து தப்புவிக்கும் முயற்சியில் முனைந்து தோல்வியுற்றார். ஆதலால் முதுகளத்துர் பகுதிக்கு திரும்பி வந்து, வெள்ளைக்காரரது ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பணி ஒன்றை ஊர் ஊராகச் சென்று திரட்டினார். இராஜ விசுவாசத்திலும், மன்னர் மீது உள்ள பாசத்தினாலும், உள்ளத்தைப் பறிகொடுத்த மக்கள் அனைவரும் இந்த அணியில் ஒன்று திரண்டனர். முதலில் இவர்கள் பரங்கியருக்குத் தீர்வை செலுத்துவதற்கு ஒட்டுமொத்தமாக மறுத்தனர். 1798ல் குடிமக்களிடமிருந்து தீர்வையைக் கூடுதலாக விதிப்பதற்கு நில அளவை செய்யும் அவர்களது பணிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். இதனால், வெகுண்டெழுந்த கம்பெனி நிர்வாகம் பாளையங்கோட்டையிலிருந்த இராணுவ அணியைப் பயன்படுத்தி இந்த மக்களது முயற்சிகளை முறியடித்தனர்.

இராமனில்லாத அயோத்தி போலாகிவிட்ட மறவர் சீமையில் கும்பெனியார் கும்மாளமடிக்கத் தொடங்கினர். ஏற்கனவே, மதுரை, திண்டுக்கல் சீமைகளில் நடத்திய அதிகாரக் கொள்ளையினால் தெம்பு பெற்ற அவர்கள், இடைத்தரகர்களாகப் பாளையக்காரர்கள் எவரும் இல்லாததால் மறவர் சீமைக்குடிகளைப் பதம்பார்க்கத் தொடங்கினர். சேதுபதி மன்னர் இல்லாத நிலையில் குடிகள் தங்களது குறைகளுக்குத் தீர்வு பெற இயலாத வேதனை அடிக்கடி வந்து வளமையைக் குறைக்கும் வறட்சி, பல பற்றாக்குறைகள், இந்த அவலச் சூழ்நிலை பற்றிக் கும்பெனியார் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக எரிந்த வீட்டில் கிடைத்தது ஆதாயம் எனக் கிடைத்த வரை குடிகளை வருத்திக் கொள்ளையைத் தொடர்ந்தனர். ஏற்கனவே, மறவர் சீமையில் உள்ள 739 கிராமங்களுக்கான கி.பி.1797-98க்கு விளைச்சல் மதிப்புக்கான முறைப்படி 53,560/- ஸ்டார் பக்கோடா பணம்’ என மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த விளைச்சலுக்கு

2ஆங்கிலேயர் பொற்காசு