பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s - 149 மாவீரன் மயிலப்பன்= -

லூஸிங்டனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் பிரதிபலிப்புதான் மேலே கண்ட கடித வாசகமாக அமைந்துள்ளது.

அடுத்து இராமநாதபுரம் சிவகெங்கை கிளர்ச்சிகளில் ஈடுபட்ட கும்பெனியாரது இராணுவ வலிமைக்கு பெரும் சவாலாக விளங்கிய. மக்கள் தலைவர்களான சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரையும் முத்துக்கருபபத் தேவரையும் தேடிப்பிடிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரையும், அவரது ஆட்களையும் சாயல்குடி காட்டில் வளைத்துப் பிடித்தனர் என்றும், இதற்கு இராமாதபுரம் சீமையின் பட்டத்திற்கான உரிமை கோரி வந்த இராணி மங்களேஸ்வரி நாச்சியார் உதவினார் என்பது தெரியவருகிறது. கும்பெனியாரது கரங்களுக்குச் சிக்கி விடாமல் தப்பித்து வந்த சித்திரங்குடி சேர்வைக்காரரரை உயிரோடு பிடிப்பதற்குப் பல முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். அழிந்த கண்மாயில் கச்சா வலையினால் மீன்களைப் பிடிப்பது எளிதான செயல் அல்லவா? மக்களிடமிருந்து அதிகார வலிமையினால் தனிமைப் படுத்தப்பட்ட கோயில்கள், மடங்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள், பயணிகள் கூட்டத்தினால் சித்திரங்குடி சேர்வைக்காரர் மாறுடையில் இருப்பார் என்பது கும்பெனியார் கணிப்பு. இதனை உறுதிபடுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததை அவரது ஆவணங்களே எடுத்துக் கூறுகின்றன.,

இந்த ஆவணத்தின்படி கும்பெனி அலவலரான தாராபுரம் தாசில்தார் பழனிமலைக்கு தைப்பூசத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்களின் கூட்டத்தைக் கண்காணித்து வந்ததுடன் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த விவரங்களைச் சரிபார்த்து அதற்குப் பொருத்தமாக இருந்த பக்தர் ஒருவரை சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் என்று உறுதிசெய்துகொண்டு, அந்த பக்தரை மேல் விசாரணைக்காகப் பழனியில் உள்ள தாசில்தாருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். அந்த நபரினை விசாரணை செய்ததுடன் அவரது தலைமுடியையும் தாடியையும் பிய்த்துப் போட முயன்றபோது தான்

102. Madurai Disrict Records vol 1221 (10.01.1802) p-71