இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15C
- - மறவர் சீமை
அந்த நபரின் பெயர் அய்யாவையன் என்பதும், சித்திரங்குடி சேர்வைக்காரர் அல்ல என்பதும், அறிந்து அவரை திருப்பி அனுப்பி விட்டார். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழிக்குப் பொருத்தமாக இந்த நிகழ்ச்சி சுட்டிக் காண்பிக்கிறது. இன்னும் இதனைப்போன்று எத்தனை இடங்களில், எத்தனை பேர்களைச் சித்திரங்குடி சேர்வைக்காரர் எனத் தவறுதலாகப் பிடித்து வைத்து வீணான முயற்சியில் கும்பெனியார் ஈடுபட்டனரோ? இவ்விதம் தாராபுரத்திலும், பழனியிலும் கும்பெனி அலுவலர்கள் சித்திரங்குடி சேர்வைக்காரரைத் தேடி வலைவீசி கொண்டிருநதபோது, அவர் கமுதி, பாப்பான்குளம் பகுதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ஏற்பட்டிருந்த வேதனையும், விரக்தியும் இங்கு குறிப்பிடத்தக்க தன்று.