15.2
- மறவர் சீமை
சேர்வைக்காரர், பழனி பாளைய வெள்ளையன் சேர்வைக்காரர், சின்ன வலையப்பட்டி கட்டையன் சேர்வைக்காரர், காமாட்சி பட்டிவயிரவன் சேர்வைக்காரர் ஆகியோர். இவர்கள் அனைவரும் பழனியிலும், சத்திரப்பட்டியிலும் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் மேலே குறிப்பிட்ட லெட்சுமண நாயக்கர் மகன் ராமராஜ், சிந்தாலபட்டி நல்லப்ப கவுண்டர், நண்டுகதிர் நாயக்கர், முண்டவண்டி நஞ்சையன் சேர்வைக்காரர் ஆகியவர்களுக்கு ஜென்ம தண்டனை வழங்கப்பட்டு தூரக் கிழக்கில் உள்ள கும்பெனியாரது தீவுகளுக்கு நாடு
கடத்தப்பட்டனர்.
பிறந்த மண்ணின் மாண்பைக் காப்பதற்காக, இறைவனால் படைக்கப்பட்ட நீர், காற்று, ஆகாயம் போல, எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் புனித மண்ணும் அதில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் மானிட சமூகத்திற்கு நன்றிக் கடனாகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்த சிறந்த அந்த மக்கள் தலைவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். பரங்கிகள் ஐயாயிரம் கல்தொலைவிற்கு அப்பால் உள்ள நாட்டில் இருந்து வாணிபம் செய்து பிழைக்க வந்தவர்கள். இந்த நாட்டின் அரசியலைத் தங்களது வாணிப வளர்ச்சிக்காக வளைத்து.ஆக்கிரமித்தனர். நாளடைவில் இங்குள்ள இழி பிறவிகளது சுயநலத்தைத் தங்களது ஏகாதிபத்திய இலக்குவிற்குச் சாதகமாய் பயன்படுத்தி இந்த நாட்டை அடிமைப்படுத்தி இந்த நாட்டின் புதிய ஆளவந்தார்களாகி விட்டனர்.
இப்பொழுது, அவர்கள் இந்த நாட்டின் பாரம்பரிய தொழில்களான நெசவு, விவசாயம் போன்ற சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத கிராமப்புறத் தொழில்களை நசித்துவிடச் செய்ததுடன், இந்த நாட்டின் பரம்பரை ஆட்சியாளர்களான இராமநாதபுரம், சிவகெங்கை, தஞ்சாவூர் மன்னர்களையும் அவர்களது நிர்வாகப் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்களையும் நீக்கி, அவர்களது குடிமக்களைத் தங்களது அடிமைகளாக மாற்றினர்.