பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறவர் சீமை

வருடிகளையும் ஏவி விட்டான்.

காளையார் கோவிலுக்கும் அரண்மனை சிறுவயலுக்கும் இடைப்பட்ட அடர்த்தியான காட்டுப் பகுதியை இந்த இழி பிறவிகள் கைக்கூலி பெறுவதற்காக அலசினர். அவர்களது இந்த முயற்சியில் மருது சேர்வைக்காரர்களது அமைச்சரான கட்டையன் சேர்வைக்காரர் சிவகங்கைச் சீமையின் இறுதி மன்னர் விஜயரகுநாத வேங்கன் பெரிய உடையாத் தேவர் ஆகியோர் முதலில் சிக்கினர். இவர்களை அடுத்துப் பிடிக்கப்பட்ட சின்னமருது சேர்வைக்காரரது மகன் சிவத்ததம்பி, காடல்குடி பாளையக்காரரான கீர்த்திவீர குஞ்சு நாயக்கர் ஆகியோர் பிடிக்கப்பட்டு கண்டிரமாணிக்கத்தில் தூக்கில் ஏற்றப்பட்டனர். இன்னும் ஏராளமான விடுதலை இயக்க வீரர்கள் பிடிக்கப்பட்டு அந்தக் காட்டில் ஓங்கி வளர்ந்த மரக் கிளைகளுக்கிடையில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

இன்னும் பரங்கிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்களை அவர்களது பிறந்த மண்ணில் இருந்து வாழ்நாள் எல்லாம் அந்த மண்ணைப் பற்றியும் அந்த மண்ணில் உள்ள அவர்களது உற்றார் உறவினர்களையும் நினைத்து, நினைத்து உள்ளம் உருகி வேதனைப்படுவதற்காக இலங்கை திரிகோணமலையிலும், மலேயா நாட்டு பினாங்கு தீவிலும் அடைத்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இந்தக் கொடுமைகள் தொடர்ந்தன.