உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறவர் சீமை

பார்ப்பவர்களைப்போல குழுமி நின்றனர். அப்படி அந்தக் கப்பலில் புதுமையாக என்ன இருந்தன? அல்லது அந்தக் கப்பலில் பயணம் செய்ய இருப்பவர்கள் முக்கியமானவர்களா?

சிறிது நேரத்தில் கும்பெனியாரின் சிப்பாய்களது பாதுகாப்பில் இரண்டு இரண்டு பேர்களாக கைகள் விலங்கிடப்பட்டு வரிசை வரிசையாக சிலர் வந்து கொண்டிருந்தனர். இவர்களைக் காண்பதற்குத் தான் இந்தக் கூட்டம் காத்துக் கொண்டிருந்ததா? அவர்கள் யார்? அவர்கள் வேறுயாருமல்ல கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நெல்லைச் சீமைகளில் கும்பெனியாரின் கொடுமைகளுக்கு எதிராக போர்க்கொடி துளக்கிய வீரமறவர்கள்தான் அவர்கள். அவர்கள் சார்ந்திருநத கிளர்ச்சிக்கார அணியினர் அனைவரும் காளையார்கோவில் கோட்டைப் போருக்கு பிறகு முழுவதுமாக பிடிக்கப்பட்டு ஆங்காங்கு தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் எஞ்சியிருந்த எழுபத்திரண்டு வீர மறவர்களைக் கும்பெனி நிர்வாகம் நாடு கடத்த உத்தரவிடடது. மலேசியா தீபகற்பத்திலுள்ள பினாங்கு தீவில்தான் இனிமேல் அவர்கள் வாழ வேண்டிய சிறைக்கூடம், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பாதுகாப்புக் கைதிகளாக அங்குதான் இருக்க வேண்டும். நாட்டின் நலனிற்காக மக்களது எதிர்கால வாழ்விற்காக அன்னிய ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்கு இந்தப் புனித மண்ணில் இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காக "இதந்தரு முனையின்" நீங்கி இடர்மிகு போராட்டங்களை நடத்தி அந்தப் புனிதர்களைக் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களுக்கு வழங்கும் தண்டனை போல இந்த மக்கள் தலைவர்களுக்குக் கும்பெனித் துறைத்தனம் வழங்கிய பரிசு அது.

கூட்டதிலிருந்தவர்கள் தத்தம் பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்களது உறவினர்களும், அந்தக் கூட்டத்தில் இருக்கின்றனரா? என்று தெரிந்து கொள்வதற்காகவும் அப்படியிருந்தால் அவர்களை கடைசியாக ஒரு முறை பார்த்து இறுதியாக பிரியாவிடை கொடுத்து