பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

- மறவர் சீமை

அகத்தாரிருப்பிருலிருந்து புறப்பட்ட மயிலப்பன் சேர்வைக்காரர் உச்சி வேளையில் மனலூர் சென்றடைந்தார். அந்த கிராமத்திற்கு வெளியே அமைந்து இருந்த சிவன் கோவிலில் தங்கியிருந்து இரவு நேரம் வருவதற்காக காத்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர், அவர் சிறுவனாக இருக்கும்பொழுது அவனது தாயாரும் வேறு சில பெண்களுமாக அங்கு வந்து அங்குங்ளள சுவாமிக்கு வழிபாடுகள் நடத்திய பிறகு கோயில் அர்ச்சகர் அவருக்கு மயிலப்பன் என்று பெயர் சூட்டி அவளது வாயில்கருப்புக் கட்டி துண்டு ஒன்றைப் போட்டு விழுங்கச் சொன்னதும் அப்பொழுது அவரது நினைவிற்கு வந்தது. அப்பொழுது இருந்ததை இன்னும் சொல்லப்போனால் மயிலப்பன் என்ற அன்று புதிதாகச் சூட்டப்பெற்ற பெயர் முருகக்கடவுளைக் குறிப்பதாக இருந்தாலும் உண்மையில் அந்த ஊரில் சில காலத்திற்கு முன்னால் மிகுந்த புகழுடன் வாழ்ந்த ஒரு நல்ல மனிதரது நினைவாகத்தான் சூட்டப்பட்டது. அந்தப் பெயருக்கு ஏற்ப, அந்த நல்ல மனிதரைப் போல, இப்பொழுது தாமும் மிகப் பெரிய வீரனாக மக்களுக்குப் பலவகையிலும் உதவி வந்த பரோபகாரியாக, மக்களால் பெரிதும் புகழ்ந்து சொல்லப்படுகிற பெருமனிதராக இருக்கிறோமா என்று கூட அவர் தமக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டார். இனிமேல்ாவது.... என்று அவர் எண்ணியபோது அவருக்குள் சிரிப்பு தோன்றி மறைந்தது.

நடுச்சாமத்திற்கு, இரண்டு நாழிகை இருக்கும் வேளையில் மயிலப்பன் சித்திரங்குடி கிராமத்திற்குள் மிகவும் எச்சரிக்கையாகச் சென்று அவரது வீட்டுக் கதவை மெதுவாகத் திறந்தார். மாடத்தில் இருந்த ஆமணக்கு எண்ணை அகல் விளக்கின் மங்கிய ஒளியில் அவரது மனைவி கட்டிலில் படுத்து இருப்பதும் அவர் அருகே அவரது மாமனாரும் தமக்கையும் அமர்ந்து ஏதோ மருந்து புகட்டிக் கொண்டு இருப்பதும் தெரிந்தது. அவரை அறியாமலேயே அவரது கண்களில் நீர் நிறைந்தன. மெதுவாக மனைவியின் கட்டில் அருகே சென்று "அபிராமி" உனக்கு என்ன நோய்? எப்படி இருக்கிறாய்?