இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 Յ 4
- மாவர் சீமை
பரங்கிகளது ஆசை வார்த்தைகளால் வெறியூட்டப்பட்ட அந்தக் கயவர்கள் கேளாக்காதினராக இருந்தனர். சில நொடிகளில் மயிலப்பன் சேர்வைக்காரரை அங்கிருந்து முரட்டுத்தனமாகத் தள்ளியவாறு வெளியே இழுத்துச் சென்றனர். அப்பொழுது மயிலப்பன் சேர்வைக்காரர், ஒருமுறை தமது தமக்கையையும், மனைவி அபிராமியையும் உற்றுப் பார்த்தார். அதுதான் அவர்களுடைய கடைசி சந்திப்பு என்பதை அந்தப்பார்வை உணர்த்தி இருக்க வேண்டும்.
ஏற்கனவே போட்ட கூச்சலினால் அயர்ந்து போய் இருந்த பீதியினாலும், பயத்தினாலும் நடுங்கிய அபிராமியின் கண்களை இமைகள் மூடின. இனிமேல் அவள் தனது கணவனைப் பார்க்க
இயலாதுதானே.
அந்த சோக நாடகக் காட்சியின் உச்சக்கட்டமாக அபிராமியின் மரணம் அமைந்துவிட்டது.